இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

விவசாயிகளின்80லட்சம் ரூபாய் போலி கையெழுத்து போட்டு மோசடி?

advertisement by google

♦விவசாயிகளின் 80 லட்சம் ரூபாய் போலி கையெழுத்து போட்டு மோசடி!

advertisement by google

?போலி கையெழுத்து போட்டு, விவசாயிகளின் பணம் 80 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார் கூட்டுறவு சங்க செயலாளர் ஒருவர். ஒப்புக் கொண்டபடி பணத்தை திருப்பித் தராததால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

advertisement by google

?நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பில்லூர், சங்கநாயக்கன்பட்டி, வில்லிபாளையம், குச்சிபாளையம், மேற்குபுதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் வைப்புத்தொகை செலுத்தி கணக்குகளை பராமரித்து வருகின்றனர்.

advertisement by google

?இந்நிலையில் கடந்த மாதம் 31 ந் தேதி கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள், விசாரணைக்கு வருமாறு தெரிவித்திருந்தனர். நோட்டீசை கண்டு அதிர்ச்சி அடைந்த வைப்புதாரர்கள் கடந்த 18-ம் தேதி அதிகாரிகளை சென்று சந்தித்தனர். அப்போது, விவசாயிகள் பராமரித்து வந்த வைப்பு தொகையை போலி கையெழுத்து போட்டு, கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேசபெருமாள் என்பவர், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

advertisement by google

?இதனால் அதிர்ச்சி அடைந்த வைப்புதாரர்கள் மோசடி குறித்து சங்க செயலாளரிடம் கேள்வி எழுப்பியபோது, பணத்தை விரைவில் திருப்பித் தந்துவிடுவதாக கூறியதாகத் தெரிகிறது.

advertisement by google

?இந்த நிலையில் பலநாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு செயலாளர் உட்பட எந்த அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை.

advertisement by google

?இதுகுறித்து தகவல் அறித்த பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் போராட்டம் வேண்டாம் என கேட்டு கொண்டதோடு தேர்தல் முடிந்தவுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூறியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

advertisement by google

?கூட்டுறவு கடன் சங்கத்தில் அவசர தேவைக்காக இலட்சக்கணக்கில் பணத்தை செலுத்திய விவசாயிகள், பொதுமக்களின் பணத்தை சங்க செயலாளர் போலி கையெழுத்து போட்டு ரூ.80 இலட்சம் வரை கையாடல் செய்த சம்பவம் பரமத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

advertisement by google

Related Articles

Back to top button