இந்தியாபக்தி

அயோத்தியில் ராமர்கோயில் கட்ட ஜார்கண்ட் மக்கள் வீட்டிற்கு தலா ரூ11ம்,செங்கலும் வழங்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்?

advertisement by google

கிரிதிக் :

advertisement by google

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜார்கண்ட் மக்கள் அனைவரும் வீட்டிற்கு தலா ரூ.11 ம், செங்கலும் வழங்கும்படி உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

advertisement by google

ஜார்கண்ட்டில் டிச.,20 ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சமூகத்தின் பங்களிப்பிலேயே ராம ராஜ்யம் இயங்குகிறது. ராம ராஜ்யசத்தில் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். சமூகம், இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியும் அதில் அடங்கும் என்றார்.

advertisement by google

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் நவ.,09ம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் டிச.,12 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை பா.ஜ.,வும், உ.பி., அரசும் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button