இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உளவுத்துறை ஆய்வாளர் என்ற நாடகம்? ஏட்டிக்கு போட்டியான எக்ஸ் ஏட்டையா கைது?

advertisement by google

♦ஏட்டிக்கு போட்டியான எக்ஸ் ஏட்டையா ..! உளவுத்துறை ஆய்வாளர் நாடகம்

advertisement by google

?தர்மபுரியில் உளவுத்துறை ஆய்வாளர் என கூறி, பெண்ணிடம் 7 லட்சம் ரூபாயை மோசடி செய்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

advertisement by google

?போலீஸ் மீது செருப்பு வீசி அரிவாளுடன் விரட்டிய முன்னாள் போலீஸ் குடும்பத்தின் அடாவடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

advertisement by google

?தருமபுரி, நியூ காலனியைச் சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மாது. 6 ஆண்டுகளுக்கு முன்பு அரூர் அருகே கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய போது, பெண்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து வந்த புகாரைத் தொடர்ந்து ஏட்டு மாதுவை, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.

advertisement by google

?இந்நிலையில், தருமபுரியில் மிக்ஸி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் ராஜாராம் அவரது மனைவி தேன்மொழி ஆகியோரிடம், தான் உளவுத்துறை காவல் ஆய்வாளர் என்று ஏமாற்றி அடிக்கடி சென்று வந்துள்ளார்.

advertisement by google

?அப்போது தன்னுடைய மனைவி காந்திமதி பெயரில் 4 ஏக்கர் நிலத்தை, ஒரு ஏக்கர் 13 லட்சத்திற்கு விலைபேசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது. ஆறு மாத காலத்திற்குள் நிலத்தை கிரயம் செய்து தருவதாக ஒப்பந்த பத்திரமும் எழுதி கொடுத்துள்ளார்.

advertisement by google

?ஆனால் ஆறு மாதத்திற்கு மேலாகியும் நிலத்தை கிரயம் செய்து தராமல் அலைக்கழித்த மாது, ஏற்கனவே இவர்களிடம் பெற்ற மூன்று காசோலைகளை வைத்துகொண்டு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

advertisement by google

?இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக முன்னாள் தலைமைகாவலர் மாதுவை விசாரணைக்காக அழைக்கச் சென்ற காவல்துறையினரை தள்ளி விட்டதோடு கையில் அரிவாளுடன் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

?அவரது மனைவியோ கையில் செருப்பை எடுத்து சாதாரண உடையில் இருந்த போலீஸ் மீது வீசி ஆபாசமாக திட்டினார். அவரது மகனும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

?பொறுமையிழந்த காவல்துறையினர் ஒரு கட்டத்தில் முன்னாள் ஏட்டு மாதுவை போலீசாரின் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின்னரும் சம்மன் இருக்கிறதா ? நீதிமன்ற உத்தரவு இருக்கின்றா ? என்று சட்டம் பேசிக் கொண்டிருந்தார் மாது..!

?காவல் துறையினர் அழைத்த போதே வந்திருந்தால், மோசடி வழக்கோடு போயிருக்கும் முன்னாள் ஏட்டய்யா செய்த சேட்டையால் கூடுதலாக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலி உளவுத்துறை அதிகாரி மாதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

?போலீஸ் துறையில் இருந்த ஒரு தலைமைக் காவலரின் குடும்பத்தினரே போலீசாரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button