இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

உலகஅளவில் கொரோனா வைரஸ் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 4வதுஇடத்திற்கு வந்த இந்தியா? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

உலக அளவில் கொரோனா வைரஸ்.. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 4வது இடத்திற்கு வந்த இந்தியா.

advertisement by google

ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் நாடுகள் பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 6147 பேருக்கு தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4வது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது.

advertisement by google

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 50 லட்சத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 94751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 20289 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 15,70,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93,553 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று ஒரு நாளில் 1,552 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நாடுகள்.. அதிகரித்தும் வரும் நாடுகள்.. விவரம்

advertisement by google

16517 பேருக்கு பாதிப்பு
பிரேசிலில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு 16,517 ஆக அதிகரித்தது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,885 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பிரேசிலில் கொரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 17,983 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1,130 பேர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

9263 பேருக்கு பாதிப்பு
மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.இங்கு நேற்று புதிதாக 9263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,99,941 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் 2,837 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று மட்டும் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

6147 பேருக்கு பாதிப்பு
4வது இடத்தில் இந்தியா உள்ளது. நேற்று புதிதாக 6147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,64,75 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 3,302 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் உயிரிழப்பு என்பது இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா 16வது இடத்தில் தான் உள்ளது. பாதிப்பிலும் இந்தியா உலக நாடுகளை ஒப்பிடும் போது 11வது இடத்தில் தான் உள்ளது.

advertisement by google

ஐரோப்பிய நாடுகள் எப்படி
இதற்கிடையே இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று 1251 பேருக்கும், பாகிஸ்தானில் 1841 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 939 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் 370 பேர் இறந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உள்பட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் முன்பை விட மிக குறைவாக உள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button