தமிழகம்

கோவில், மசூதி, தாலி, பசு, எருமை: இதுதான் தற்போது பிதமருக்கு பிடித்த வார்த்தைகள்- லாலு பிரசாத் யாதவ்

advertisement by google

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி-க்களின் இடஒதுக்கீடு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. டெக்னிக்கல் மற்றும் படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகள் உள்பட ஏறத்தாழ 6.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்… பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோவில்- மசூதி, தாலி, பசு, எருமை.2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். இன்னும் ஏழு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும். வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி, வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button