இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

யாரெல்லாம் ஆபாச படம் பார்த்தனர்?எத்தனை மணிக்கு பார்த்தார்கள் மொத்த லிஸ்டும் ரெடியாம்?

advertisement by google

யாரெல்லாம் ஆபாச படம் பார்த்தனர்.. எத்தனை மணிக்கு பார்த்தார்கள்.. மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்!

advertisement by google

சென்னை: “யாரெல்லாம் ஆபாச வீடியோவை பார்த்தார்கள், எத்தனை மணிக்கு பார்த்தார்கள், அதை யாருக்கெல்லாம் ஷேர் செய்தார்கள், அவர்களின் செல்போன் நம்பர், ஐபி நம்பர் என்ன என்ற லிஸ்ட் எடுத்துவிட்டோம்… மொத்த பேரும் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் உறுதி” என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

advertisement by google

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது.
அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.

advertisement by google

டிஜிபி ரவி
இதையடுத்து, தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி பேட்டியும் அளித்திருந்தார்.

advertisement by google

வீடியோக்கள்
”குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். அவைகளை செல்போன்களிலும், லேப்டாப்களிலும் வைத்திருப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் சட்டப்படி குற்றம். அப்படி மீறி செய்பவர்கள் போக்சோவில் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை உண்டு.

advertisement by google

மத்திய உள்துறை அமைச்சகம்
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்கள் லிஸ்ட் தயாராகி வருகிறது. அவர்கள் யார், யாரென்ற விவரங்களை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளோம். அந்தப் பட்டியலில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதையும், மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு 5,000 பக்கங்கள்கொண்ட அறிக்கையாக அனுப்பியிருந்தது.

advertisement by google

சென்னை
இதில், சென்னையில்தான் அதிகம் பேர், பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான வீடியோக்கள், படங்களை பார்த்தனர் என்பதையும் இப்போது கண்டுபிடித்துள்ளோம்.

advertisement by google

செல்போன் நம்பர்கள்
அது மட்டுமில்ல.. எந்ததெந்த டிவைஸ்களிலிருந்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் பார்க்கப்பட்டன, அந்த செல்போன் நம்பர்கள் என்ன.. ஐபி நம்பர்.. நெட்வொர்க் என்ன.. எத்தனை மணிக்கு அந்த வீடியோவை பார்த்தார்கள்.. யாருக்கெல்லாம் அந்த வீடியோவை ஷேர் செய்தார்கள் என்பன போன்ற புள்ளிவிவரங்கள் கூட தற்போது லிஸ்ட் எடுத்துவிட்டோம். கமிஷனர் ஆபீஸ்களுக்கும், எஸ்பி ஆபீஸ்களுக்கும் அடுத்த வாரம் அந்த லிஸ்ட்டை அனுப்பி வைத்துவிடுவோம். பிறகு இவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.

advertisement by google

Related Articles

Back to top button