இந்தியா

கோவில்பட்டியை சார்ந்த நெல்லை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி அவர்களுக்கு மத்திய அரசு விருது; குவியும் பாராட்டுகள்✍️ மதவாத பிரச்னையை தடுப்பது குறித்த புலனாய்வில் சிறப்பாக பணியாற்றிய நெல்லை பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியை சார்ந்த நெல்லை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி அவர்களுக்கு மத்திய அரசு விருது; குவியும் பாராட்டுகள்!
மதவாத பிரச்னையை தடுப்பது குறித்த புலனாய்வில் சிறப்பாக பணியாற்றிய நெல்லை பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வழங்கப்பட்டது.

மதவாத பிரச்னையை தடுப்பது குறித்த புலனாய்வு
சிறப்பாக பணியாற்றிய நெல்லை பெண் காவல் ஆய்வாளர்
பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது

advertisement by google

பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது​?
நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் பாண்டி முத்துலட்சுமி என்பவருக்கு 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு விருதுநகர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி பின்பு, 2016 ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று அன்றிலிருந்து இன்று வரை நெல்லை மாவட்டத்தில் சிறப்பு புலனாய்வு குற்ற பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

advertisement by google

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகர பகுதிகளில் மதவாதிகள் குறித்த புலனாய்வு பற்றி கண்காணிக்கும் பணியில் உள்ளார்.‌ இதில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்கும், மத அடிப்படைவாதிகள் பற்றி புலனாய்வு செய்து முன்னெச்சரிக்கையாக மத ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்ததற்காக இவருக்கு உள்துறை அமைச்சகம் இந்த விருதை வழங்கி உள்ளது.

advertisement by google

பெண் காவல ஆய்வாளர் ஒருவர் உள்துறை அமைச்சகத்தின் விருது பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button