பயனுள்ள தகவல்மருத்துவம்

தேள் கொடுக்கில் உள்ள விஷம் இதயத்தைக்காக்கும் போர்வாள்?நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத்தகவல்?

advertisement by google

தேள் கொடுக்கில் உள்ள‍ விஷம் உங்கள் இதயத்தைக் காக்கும் போர்வாள்! – நம்பமுடியாத அதிரடியான ஆச்சரியத் தகவல்!

advertisement by google

தேள் கொட்டினால்,உயிருக்கே ஆபத்து, அல்ல‍து நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்றெல்லாம் இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

advertisement by google

அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்ச‌னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவைத் தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

advertisement by google

உயிருக்கு ஆபத்தான இந்தப் பிரச்சனையை சரி செய்ய, இதய அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்ச‌னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும் போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதைத் தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்க‍ப்பட்டுள்ள‍து.

advertisement by google

ஓர் ஆய்வு முடிவில் வெளியான தகவல் தான். தயவுசெய்து இதைப் படித்து தேள் எங்கிருக்கிறது என்று தேடிக் கண்டு பிடித்து அதனிடம் (தேளிடம்) கடியோ, கொட்டோ வாங்காதீர்!

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button