இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறு

ஜிஎஸ்டி வரி செலுத்தினால் லாட்டாரி முறையில் பரிசு? மத்தியரசின் பயங்கர திட்டம்?

advertisement by google

ஜி.எஸ்.டி. செலுத்துபவர்களுக்கு லாட்டரி முறையில் பரிசு வழங்க மத்திய அரசு திட்டம்?

advertisement by google

புது தில்லி: ஜி.எஸ்.டி. செலுத்தும் நுகர்வோர்களுக்கு லாட்டரி முறையில் பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

advertisement by google

இதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்துவதில் இருக்கும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று நிதித் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

advertisement by google

இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி செலுத்திய ரசீது நகலை அதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் இணையதளத்தில் அல்லது செயலியில் நுகர்வோர்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவேற்றப்படும் நுகர்வோரின் ரசீதுகள் தானியங்கி முறையில் குலுக்கப்படும்.

advertisement by google

நுகர்வோர் பதிவு செய்யும் செல்போன் எண், ரிசீதின் எண், ஜிஎஸ்டி எண் ஆகியவற்றைக் கொண்டு லாட்டரி முறையில் தினந்தோறும் மற்றும் மாதந்தோறும் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

advertisement by google

இந்த திட்டத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கு செலுத்திய ஜிஎஸ்டி தவிர்த்து மற்ற அனைத்து ரசீதுகளையும் பதிவு செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றதும், விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

advertisement by google

இந்த திட்டத்தின் மூலம் நுகர்வோரிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலித்துவிட்டு, அதனை செலுத்தாத வர்த்தகர்களும் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஏடி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட போது தில்லி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது போன்றே இந்த லாட்டரி திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது..

advertisement by google

Related Articles

Back to top button