தமிழகம்

மின் உற்பத்தியை எதுக்கு தனியாரிடம் கொடுக்கறீங்க? – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சீமான் சரமாரி கேள்வி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

மின் உற்பத்தியை எதுக்கு தனியாரிடம் கொடுக்கறீங்க? – செந்தில் பாலாஜிக்கு சீமான் சரமாரி கேள்வி!*

advertisement by google

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஊடக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது: “மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் இல்லை. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த மின் உற்பத்தியை எதற்கு தனியாரிடம் கொடுக்கின்றீர்கள். அப்படி என்றால் மின்கட்டணத்தை எப்படி கட்டுக்குள் வைப்பீர்கள். தமிழக மின்துறை அமைச்சர் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மின்சார கட்டணத்தை கூட்டியதாக கூறுகின்றார் என்றால், அத்தியாவசியமான அனைத்தும் தனியார் வசம் கொடுப்பதால் அது பேராபத்தான பயணம் ஆகும். அதுதான் மோசமான பொருளாதாரக் கொள்கை. அதுதான் இலங்கையில் நடந்து. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கூட ஐந்து நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த நிலைமை நமக்கு வரும் முன், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

advertisement by google

அதிமுகவின் எஜமானர் பிஜேபி; அமைச்சர் விமர்சனம் !

advertisement by google

மத்திய அரசு தேசிய கொடியை மூன்று நாட்கள் வீட்டில் ஏற்றுங்கள் என்று கூறியுள்ளது. ஆனால் அதற்கு வீடு வேண்டுமே. 75வது ஆண்டு சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால் அது வழங்கவில்லை. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தார்கள். 850 மீனவர்கள் உயிரிழந்தார்கள்.

advertisement by google

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

advertisement by google

நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல சகோதரிகள் உயிரிழந்தார்கள். இந்த துயரம் நடைபெறக்கூடாது என அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?. 20 பேர் ஆந்திரா காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு ஏதாவது கண்டனம் அறிவித்தார்களா, எதுவுமே இல்லையே. அப்படி இருக்க தேசபற்று எப்படி வரும் புற்று கூட வரும் பற்று எப்படி வரும் என்றார்.

advertisement by google

தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. மெத்தனம் காட்டும் ஸ்டாலின்.. வி.பி. துரைசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

advertisement by google

கனிம வளங்கள் சங்கரன் கோவில் மட்டுமல்ல, நாடெங்கிலும் கனிம வளங்கள் கொள்ளை போவதாக குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் புதிய வீடியோ ஆதாரங்கள் வருவதாக கூறி தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில், அதன் தலைவர் முதல்வர்தானே. இது எல்லாம் ஏமாற்றுவேலை. தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் வாக்கு செலுத்துகின்ற வரை அவர்களின் வாழ்க்கைக்கோ, உயிர்க்கோ எந்த ஒரு உறுதி தன்மையோ இருக்காது” இவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button