இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டி நகராட்சியில் டெங்கு வாகண பிரச்சாரம்?

advertisement by google

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம்

advertisement by google

கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கோவிந்தராஜன் உத்தரவின் பேரிலும், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ ஆலோசனையின் பேரிலும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளிலும், விளம்பர வாகத்தின் மூலம் தெருத்தெருவாக சென்று டெங்கு தடுப்பு விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நகராட்சிக்குட்பட்ட வார்டு 30, 31 பாரதிநகர் பகுதிகளில் தெருத்தெருவாக சென்று நகராட்சி விளம்பர வாகனத்தின் மூலம் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள். விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள வரும் நகராட்சி களப்பணியாளர்களுக்கு முழுஒத்துழைப்பு தருமாறும், தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பேரல்கள், சிமெண்ட் தொட்டிகள், கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை கொசு புகா வண்ணம் இறுக்கமாக மூடிவைக்குமாறும், நகராட்சி குடிநீர் குழாய் இணைத்துள்ள கீழ்நிலைத்தொட்டியில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், வீடுகளின் மொட்டை மாடிகளில் மற்றும் சுற்றுப்புறங்களிலும், பயனற்ற நிலையில் உள்ள உடைந்த காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில்கள், சிரட்டைகள், டயர்கள், கண்ணாடி பாட்டில்கள் முதலிய பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வீடுகளில் உள்ள பிரிட்ஜ் பின்புறம் உள்ள டிரேயில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஆய்வின் போது தங்கள் வீடுகளில் டெங்கு காய்ச்சல் பரப்புகின்ற ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் வீட்டில் குடியிருப்போருக்கு பொது சுகாதார சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நகராட்சி சுகாதார அலுவலர் திரு.இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுரேஷ், வள்ளிராஜ், சுரேஷ்குமார், களப்பணி உதவியாளர் போத்திராஜ், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பாலகிருஷ்ணன், ஆறுமுகம், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மகேந்திரன், இளையராஜா மற்றும் பரப்புரையாளர்கள் கிருஷ்ணவேணி, விக்னேஷ், முத்துராமலிங்கம், கௌசல்யா ஆகியோர் உடனிருந்தார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button