தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விளையாட்டு

சிறுவர்கள் விடும் பட்டம், பெற்றோர்கள் மீது பாயும் சட்டம் போலீஸ் எச்சரிக்கை?

advertisement by google

♦சென்னையில் சிறுவர்கள் விடும் பட்டம்: பெற்றோர் மீது பாயும் சட்டம்..” – போலீஸ் எச்சரிக்கை

advertisement by google

?சென்னையில் சிறுவர்கள் பட்டம் விட்டால், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

advertisement by google

?சென்னை கொருக்குபேட்டையில் 3 வயது குழந்தை சில நாட்களுக்கு முன்னர் மாஞ்சா நூல் கயிறு கழுத்தை அறுத்ததால் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து காவல்துறை மாஞ்சா நூல் விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

advertisement by google

?இந்நிலையில் நேற்று கொடுங்கையூரில் ராஜசேகரன் (25) என்ற இளைஞரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்தது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

advertisement by google

?இந்த சூழலில் நேற்று காவல்துறை சார்பில் மாஞ்சா நூலால் பட்டம் விடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, புதுவண்ணாரப் பேட்டையில் நடந்தது.

advertisement by google

?இதில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.  இதில் பங்கேற்று பேசிய துணை ஆணையர் சுப்புலட்சுமி, மாஞ்சாநூல்களை விற்கக்கூடாது என்றும், அவ்வாறு விற்கும் வியாபாரிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

advertisement by google

?அத்துடன் சிறுவர்கள் மொட்டை மாடிகளில் மாஞ்சா நூலால் பட்டம் விடாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதையும் மீறி சிறுவர்கள் மாடிகளில் பட்டம் விட்டால் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

advertisement by google

மனித சமூக ஒற்றுமை பேணுவோம்

advertisement by google

Related Articles

Back to top button