பயனுள்ள தகவல்

பாரம்பரிய பொன்னாங்கண்ணி எண்ணெய் இருக்க முடி கொட்டும் கவலை இனி எதற்கு…?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? பாரம்பரிய பொன்னாங்கண்ணி எண்ணெய் இருக்க முடி கொட்டும் கவலை இனி எதற்கு…?

advertisement by google

மின்னும் மேனி பொன்னாங்கண்ணி என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையை பற்றிய பதிவு தான் இது. இக்கீரையானது வயல் வரப்புகள், கிணற்றடி, குளம், ஏரி ஆகிய இடங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். இந்த கீரையை சாப்பிடுவதினால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். உடல் பலவீனம், உடல் உஷ்ணம், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு பொன்னாங்கண்ணி கீரை ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

advertisement by google

இத்தகைய பொன்னாங்கன்னி கீரையை வைத்து கூந்தலுக்கு உதவும் தைலம் எவ்வாறு செய்வது என பார்க்கலாம். இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு கண்களுக்கும் குளிர்ச்சி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரை தைலம் தயாரிக்க நமக்கு ஒரு கட்டு பொன்னாங்கண்ணி கீரை, 10 நெல்லிக்காய், 250ml நல்லெண்ணெய், 50ml விளக்கெண்ணெய், 50ml தேங்காய் எண்ணெய் மற்றும் 10 கிராம் மிளகு தேவைப்படும்.

advertisement by google

முதலில் கீரையை ஆய்ந்து தழைகளை தனியாக எடுத்து சுத்தம் செய்து தனியாக வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக நெல்லிக்காயை வெட்டி அதன் தோல் மற்றும் கொட்டைகளை நீக்கவும். இப்போது கீரை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் எந்தவித தண்ணீரும் சேர்க்காமல் விழுதாக அரைத்து கொள்ளவும்.

advertisement by google

இந்த சாற்றினை அரை மணி நேரம் வெயிலில் வைத்து எடுக்கவும். காய வைத்த பின் எடுத்து பார்த்தால் மேல் பகுதியில் தண்ணீரும் அடிப்பகுதியில் அடர்ந்த சாறும் நமக்கு கிடைக்கும். இந்த சாற்றோடு நாம் வைத்திருக்கும் எண்ணெய் அத்தனையும் கலந்து கொள்ளலாம்.

advertisement by google

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை காய்ச்சவும். இதனை மிதமான தீயில் வைத்து தான் காய்ச்ச வேண்டும். சாற்றோடு எண்ணெய் கலந்து வரும் சமயம் அடுப்பை அணைத்து அதனை குளிர்விக்கவும். இதனை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து தெளிய வைத்து மிளகு தூள் சேர்த்து ஜாடியில் ஊற்றி எடுத்து கொள்ளுங்கள்.

advertisement by google

நாம் தயார் செய்து கொண்டிருந்த பொன்னாங்கண்ணி கீரை எண்ணெய் தயாராக உள்ளது. இதனை சாதாரண எண்ணெயை போலவே தினமும் நீங்கள் தடவலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த எண்ணெயை தடவும் போதெல்லாம் உங்கள் கைகளால் தலைக்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

advertisement by google

எண்ணெயை லேசாக சூடாக்கி தலைக்கு குளிக்கும் முன்பாக நன்றாக தேய்த்து மசாஜ் செய்த பிறகு குளிக்கலாம். கண்களில் அதிக உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். மேலும் தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதோடு முடி வலுவாக இருக்கவும் உதவி செய்கிறது. நாம் தயாரித்த இந்த எண்ணெயை ஆறு மாத காலம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button