பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

ஆதாரில் வீட்டு முகவரி மாற்றம் அல்லது திருத்தம் செய்வது எப்படி?”✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

“ஆதாரில் வீட்டு முகவரி மாற்றம் அல்லது திருத்தம் செய்வது எப்படி?”

advertisement by google

ஆதார் கார்டு தான் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய அடையாள அட்டையாக இருப்பதால், எப்போதும் அதனைப் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடனே வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. மொபைல் எண்ணை மாற்றினாலோ, வீட்டு முகவரியை மாற்றினாலோ உடனடியாக ஆதாரிலும் அதனை மாற்றிவிடுவது சிறந்தது. ஏனெனில், முக்கியமான நேரங்களில் நமக்கு ஆதார் தேவைப்படும் போது அது பழைய தகவல்கள் மாற்றப்படாமல் இருந்தால் அது நமக்குச் சிரமத்தைக் கொடுக்கலாம். நம் வாசகர் ஒருவருக்கும் ஆதாரில் வீட்டு முகவரியை மாற்ற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

advertisement by google

ஆதாரில் வீட்டு முகவரியை ஆன்லைனிலோ அல்லது அருகில் இருக்கும் ஆதார் நிரந்தரப் பதிவு மையத்திற்கோ சென்று மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைனில் மாற்றம் / அல்லது திருத்தம் செய்ய UIDAI-ன் சுயசேவை தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் ஆதாரின் சுயசேவைத் தளத்திற்குச் செல்ல வேண்டும். (இங்கே கிளிக் செய்து ஆதாரின் சுயசேவைத் தளத்தை அணுகலாம்).

advertisement by google

உள்ளே சென்று நம்முடைய ஆதார் எண், கேப்ச்சா மற்றும் OTP-யைக் கொடுத்து உள்நுழைய வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் ‘Update Aadhar’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, வேண்டிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். பின்னர் நம்முடைய தகவல் மாற்றங்கள் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆவணம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் தளத்தில் குறிப்பிட்டுள்ளதன் 45 ஆவணங்களை வீட்டு முகவரியை மாற்றுவதற்காக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நம்முடைய பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம், ரேஷன் கார்டு, வோட்டர்ஸ் ஐடி, ஓட்டுனர் உரிமம், மூன்று மாதங்களுக்கு மிகாத கிரெடிட் கார்டு ஸ்டேடமண்ட் அல்லது மின்கட்டண ரசீது அல்லது கேஸ் கட்டண ரசீது ஆகியவற்றை பயன்படுத்திய நம்முடைய வீட்டு முகவரியை ஆதாரில் திருத்தம் செய்ய முடியும். இவற்றைக் கொடுத்து Submit-ஐ கிளிக் செய்தால் போதும்.

advertisement by google

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

advertisement by google

நேரில் செல்வதற்கு முதலில் நமக்கு அருகில் இருக்கும் ஆதார் நிரந்தரப் பதிவு மையம் எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அருகில் இருக்கும் ஆதார் மையம் குறித்த விபரங்களை அறிந்துகொள்ளும் இணையப்பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்திற்குச் சென்றவுடன் நம்முடைய பின்கோடைக் (Pin code) கொடுத்து நமக்கு அருகில் இருக்கும் ஆதார் மையத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் நேரில் சென்று ஆதார் அப்டேட் ஃபார்மை வாங்கிப் பூர்த்தி செய்து அங்கிருக்கும் அதிகாரியிடம் கொடுத்துவிட்டால் போதும். ஆதார் மையத்திற்குச் செல்லும்போது வீட்டு முகவரி மாற்றத்திற்குத் தேவையான மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். தகவல் மாற்றத்திற்காகக் கட்டணமாக 50 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button