இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

சுஜித்திற்காக நாகூர் வந்தவாசியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை, வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை

advertisement by google

சுஜித்திற்காக நாகூர், வந்தவாசியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை, வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை.

advertisement by google

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரை காப்பாற்றுவதற்கான, அனைத்து முயற்சிகளும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இனிமேல் ஆண்டவன் அருள் செய்தால் தவிர வேறு வழியில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

advertisement by google

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து பல மணி நேரங்களை கடந்து விட்ட நிலையிலும், முன்பை விட ஆழமான பகுதிக்கு, சுஜித் சென்றுவிட்டது. எனவே, மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது.

advertisement by google

முன்பாவது சிறுவன் சுஜித் அழுகுரல் கேட்டது. இன்று அதிகாலை முதல், அழுகுரல் வெளியே கேட்கவில்லை. மேலும், சுஜித் உடல்நிலை எப்ப்டி இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை.
இந்த நிலையில், நாகூர் தர்காவில் இன்று மதியம் சுமார், 50 இஸ்லாமியர்கள் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு சுஜித்தை காப்பாற்றுவதற்கு அருள் செய்யுமாறு இறைவனை வேண்டிக் கொண்டனர்.

advertisement by google

சுஜித்தை காப்பாற்ற விரைந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் குழு..
டிராபிக் நெரிசலில் சிக்கியதால் தாமதம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சுஜித் நலமாக திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில், மாற்று திறனாளிகளும், குழந்தைகளும் இணைந்து, சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல பல்வேறு மதத்தினரும் சுஜித் நலமாக காப்பாற்றப்பட வேண்டும் என்று, ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். சுஜித் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button