இந்தியாதமிழகம்

ஒரேதொகுதியில் மோதும் இருதமிழர்கள் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பரபரப்பு

advertisement by google

விண்மீன் விரைவு செய்திகள்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு.

advertisement by google

மும்பை: மகாராஷ்டிராவில் சியான் கொலிவாடா என்ற சட்டசபை தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் ஆளும் பாஜக சார்பிலும், இன்னொரு காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிடுகிறார். இதனால் அங்கு யார் வெற்றி பெற போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது முறையாக வெல்லும் முனைப்பில் பாஜக தனது பங்காளியான சிவசேனா உடன் கூட்டணி வைத்து களம் இறங்கி உள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எப்படியாவது இந்த முறை வென்றுவிட வேண்டும் என தேர்தலை சந்தித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!

advertisement by google

பாஜக வேட்பாளர்
இந்த தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு பேர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் ஒரே தொகுதியில் போட்டியிடுகின்றனர். சியான் கொலிவாடா என்ற தொகுதியில் தமிழ், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி என பல மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு ஆளும் பாஜக சார்பில் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் 1978ம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து மும்பை சென்று அங்கு பல்வேறு வேலைகளை செய்து வந்த அவர் அங்கேயே குடியேறிவிட்டார்.

advertisement by google

எம்எல்ஏ
கடந்த 2012ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகரின் பாஜக சார்பில் 168வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளில் அதாவது 2014ல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சியான் கொலிவாடா தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்டு தமிழ்ச்செல்வன் வென்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சதாம்கரை விட 3738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு மீண்டும் பாஜக தலைமை சீட் வழங்கி உள்ளது.

advertisement by google

காங்கிரஸ் வேட்பாளர்
இந்நிலையில் சியான் கொலிவாடா தொகுதியில் தமிழ்ச்செல்வனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கணேஷ் யாதவ் என்பவர் போட்டியிடுகிறார். இவரும் தமிழகத்தை பூர்வீமாக கொண்டவர் ஆவார். மும்பை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள கணேஷ்குமார் நிச்சயம் தமிழ்செல்வனுக்கு சவாலாக இருப்பார் என்று நினைத்து அவரை களம் இறக்கி உள்ளது.

advertisement by google

24ம் தேதி தெரியும்
இருவரில் யார் வென்றாலும் சியான் கொலிவாடா தொகுதியில் எம்எல்ஏவாக தமிழர் ஒருவர் பொறுப்பேற்க போவது உறுதியாகிவிடும் வெல்லப்போது கணேஷ்குமாரா அல்லது தமிழ்செல்வனா என்பது வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button