இந்தியா

பிரதமர் மோடியிடம் , தமிழகமுதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கம்:தி.மு.க., கூட்டணி கட்சிகள் சந்தேகம்?முழுவிவரம்?விண்மீன் நியூஸ்

advertisement by google

பிரதமர் மோடியிடம் , தமிழகமுதல்வர் ஸ்டாலின் காட்டிய நெருக்கம்:தி.மு.க., கூட்டணி கட்சிகள் சந்தேகம்

advertisement by google

சென்னை வந்த பிரதமர் மோடியிடம், தி.மு.க., காட்டிய நெருக்கம், எதிர்கால கூட்டணிக்கு அச்சாரமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு வரை, தி.மு.க., – பா.ஜ., எலியும் பூனையுமாக இருந்தன. தற்போது இரண்டு கட்சிகளின் நிலைப் பாட்டிலும் மாற்றம் தெரிகிறது. அதிலும் பிரதமரின் சென்னை வருகை, இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.

advertisement by google

உறுதி

advertisement by google

செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதும், விழாவுக்கான ஏற்பாடுகளை, தமிழக அரசு துவக்கியது. இப்போட்டிக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல், தமிழக அரசின் செயல்பாடுகள் இருந்தன.போட்டி துவக்க விழாவுக்கு, பிரதமர் வருவதை கூட, தமிழக அரசு தெரிவிக்கவில்லை; பா.ஜ., தரப்பினரே முதலில் வெளிப்படுத்தினர். இந்த சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரிடம் தொலைபேசியில் பிரதமர் நலம் விசாரித்தார்.

advertisement by google

பிரதமரின் பேச்சு, ஸ்டாலினிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.

advertisement by google

‘செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு, உங்களை நேரில் அழைக்க எண்ணியிருந்தேன். தற்போது வர முடியாத சூழல்’ என தெரிவித்துள்ளார். உடனே பிரதமர், ‘நான் வருகிறேன்’ என, உறுதி கொடுத்துள்ளார். அதன்பின் துவக்க விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்தன. துவக்க விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளில், முதல்வர் படம் மட்டும் இருந்தது; பிரதமர் படம் இல்லை. இது, பா.ஜ.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் விளம்பர பதாகைகளில் பிரதமர் படத்தை ஒட்டினர்.

advertisement by google

சில அமைப்பினர், பிரதமர் படம் மீது மை ஊற்றவே, பிரச்னை பெரிதானது. உடனடியாக காவல் துறையினர், பிரதமர் படத்தின் மீது மை ஊற்றியவர்களை கைது செய்தனர்.

advertisement by google

பிரதமருக்கு எதிரான கருத்துக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்தனர். விளம்பர பதாகைகளில் இரவோடு இரவாக, தமிழக அரசு சார்பில் பிரதமர் படம் ஒட்டப்பட்டது.சென்னை வந்த பிரதமரை, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் தி.மு.க., – எம்.பி.,க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அனைவரும் பிரதமருடன் நெருக்கம் காட்டினர்.

அ.தி.மு.க.,வினரை கிண்டல் அடித்தவர்கள், அவர்களுக்கு இணையாக பவ்வியம் காட்டினர்.

விழாவுக்கு வந்த பிரதமரை, அரங்கம் நுழைவு வாயிலில் முதல்வர் வரவேற்றார். மேடையில் முதல்வருடன் பிரதமர் சிரித்து பேசினார். அவ்வப்போது, அவரது தோளில் தட்டிக் கொடுத்தார்; முதல்வரும் நெகிழ்ச்சி அடைந்தார்.

முதல்வர் பேச்சிலும் அது எதிரொலித்தது. சென்னை வந்த பிரதமருக்கு, பா.ஜ.,வினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அதற்கு அரசு முழு அனுமதி அளித்தது. அதேநேரம், முதல்வர் வரும் வழியில் வரவேற்பு அளிக்க வேண்டாம் என, தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டது.விழா முடிந்து கவர்னர் மாளிகைக்கு, பிரதமர் செல்லும் வழியில், அவரை உற்சாகப்படுத்த, தமிழக சுற்றுலாத் துறை சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமரை வழியனுப்பச் சென்ற முதல்வர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி அசத்தினார்.

வரவேற்பு

கடந்த முறை பிரதமர், தமிழகம் வந்தபோது, முதல்வரின் பேச்சு, தி.மு.க.,வினரின் செயல்பாடு, பா.ஜ.,வினரிடம் எரிச்சலை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கண்டனம் தெரிவித்தார்.

இம்முறை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் அண்ணாமலை நன்றி தெரிவித்தார். அந்தளவுக்கு காட்சிகள் மாறி உள்ளன. சமீப காலமாக, காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் முட்டல் மோதல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமருக்கு அரசு அளித்த வரவேற்பு, தி.மு.க.,வினர் காட்டிய நெருக்கம், தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு அச்சாரமோ என்ற சந்தேகத்தை, அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தி உள்ளது.

பிரதமருக்கு சதுரங்க பலகை பரிசு

சென்னை வந்த பிரதமர், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டில்லி புறப்பட்டபோது, அவருக்கு, முதல்வர் ஸ்டாலின் மரத்தில் உருவாக்கப்பட்ட சதுரங்க பலகையை, நினைவு பரிசாக வழங்கினார்.சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் பங்கேற்றார். நேற்று, அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பகல் 12:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில், குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். விமான நிலையத்தில், கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் வழியனுப்பினர்.

பிரதமரை வழியனுப்பும்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி நினைவாக, பிரதமருக்கு மரத்தில் உருவாக்கப்பட்ட, சதுரங்கப் பலகை மற்றும் காய்களை, நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பிரதமர் பெற்றுக் கொண்டார். – நமது நிருபர் –

பிரதமரை வழியனுப்பும்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி நினைவாக, பிரதமருக்கு மரத்தில் உருவாக்கப்பட்ட, சதுரங்கப் பலகை மற்றும் காய்களை, நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பிரதமர் பெற்றுக் கொண்டார்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button