சிரிக்க சிந்திக்க

நடிகர் வடிவேலு மீம்ஸ்நாயகன் ஆனவருக்கு பிறந்தநாள் இன்று

advertisement by google

வாழ்த்துக்கள் தலைவரே??

advertisement by google

ராஜ்கிரணால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகபடுத்பட்ட அற்புதமான கலைஞன் வடிவேல். சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டு இருந்தவரை சிங்காரவேலன் படத்தில் அவரோட சேஷ்டைகள் பிடித்துபோய் கமல் சிங்காரவேலன் படப்பிடிப்பில் தனியே அழைத்து முதன்முதலில் ஒரு செக் கொடுத்து அடுத்து ஒரு கிராமத்து படம் எடுக்கிறேன் அதில் நீங்க இருக்கீங்கன்னு சொல்லிருக்கார். வடிவேல் மறக்க முடியாத படம் தேவர் மகன். வடிவேல் ஏற்று நடித்த இசக்கி கதாபத்திரம் யாராலும் என்றுமே மறக்க முடியாது. சிவாஜி, கமலுக்கு இணையாக நடித்துருப்பார் நம் வடிவேல்

advertisement by google

வடிவேல் நகைச்சுவையில் தனக்குன்னு ஸ்டைலை உருவாக்க ஆரம்பித்தார். வி.சேகர். டி.பி கஜேந்திரன், ராம.நாரயணன்,சுந்தர்.சி போன்ற இயக்குனர்கள் படங்களில் மிகவும் ஜொலிக்க ஆரம்பித்தார். அவர் ஏற்ற அத்தனை கதாபத்திரத்துக்கும் உயிர் கொடுத்து இருப்பார். நல்ல நடிகனுக்கு உடல்மொழி மிகவும் முக்கியம். வடிவேல் போல உடல்மொழியில் வேறுபாடு காட்டும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சிலரே. வடிவேலுக்கு நகைச்சுவை மட்டுமில்லாமால் குணசித்திரமாகவும் நடிப்பார். வடிவேலால் நம்மை சிரிக்க வைக்கவும் முடியும், அழ வைக்கவும் முடியும். அதான் வடிவேல்.

advertisement by google

வண்ணத்தமிழ் பாட்டு என்கிற படத்தில் துக்கத்தில் நடக்கிற வியாதி, துக்கத்தில் நடந்து போய் பாத்ரூமுக்கு போய் விடுவார் அங்கே ஆனந்தராஜ் குளித்து கொண்டு இருப்பார். அதை பார்த்து பயந்து விடுவார். அப்போ பூசாரி எதை பார்த்து பயந்தேன்னு கேட்கும்போது வடிவேல் கொடுக்கும் பாவனைகள், அத்தனை அட்டகாசமாய் இருக்கும், ஆனந்த்ராஜ் வந்து அவன் என் துப்பாக்கிக்கு மட்டும் தான் பயப்புடுவான்னு வேட்டியை தூக்கும்போது வடிவேல் ரியாக்ஷன் பார்க்கணும் இதை எழுதும்போது கூட சிரித்துகிட்டே தான் எழுதுறேன். வடிவேலுக்காக ஓடிய படங்கள்ன்னு லிஸ்ட் இருக்கு வின்னர் எல்லாம் சென்னையில் 75 நாட்கள் ஓடியது வடிவேலுக்காக மட்டுமே. வடிவேல் 1991ம் வருடத்தில் இருந்து சினிமாவில் இருந்தாலும் அவர் பீக்குக்கு வந்தது 2000ம் வருடம். 2000 டூ 2011 அவரை அடித்து கொள்ள ஆளே இல்லை. ரஜினி சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது முதலில் வடிவேல் கால்ஷீட் வாங்கிட்டு அப்புறம் என்கிட்டே வாங்கன்னு சொன்னது எல்லாம் வரலாறு.

advertisement by google

ஆரண்யகாண்டம் இயக்குனரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் வடிவேல். அருண் தமிழ் ஸ்டுடியோ நடத்திய கலந்துரையாடலில் ஒரு நடிப்பு பள்ளி வைத்து இருப்பவர் மிஷ்கினிடம் ஒரு கேள்வி கேட்டார் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நீங்க நடித்த சுடுகாடு காட்சியை எங்க மாணவர்களுக்கு போட்டு காட்டி படம் நடத்துறோம் சார் யாரோட நடிப்பை மாணவர்களுக்கு போட்டு காட்டி படம் நடத்தலாம்ன்னு கேட்டதும் மிஷ்கின் சொன்னே பதில் வடிவேல் கூடி இருந்தே அத்தனை பெறும் கைதட்டி ஆமோதித்தார்கள். நலன் குமாரசாமி வடிவேலுக்கு ஒரு கதை செய்து இருக்கிறார் எப்படியாவது அந்த ப்ரொஜெக்ட் வடிவேல் காதுக்கு சென்று இவர்கள் இருவரும் இணைய வேண்டும். இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் வடிவேலுவை வைத்து வேற பிளவரில் படம் எடுக்க வேண்டும் வடிவேல் என்னும் மாபெரும் கலைஞன் மீண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும்

advertisement by google

பாக்ஸர் கிருஷ்ணன்,சூனா பானா,டெலக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா,அங்குசாமி,ஸ்டீவ் வாக்,கட்டபொம்மு,கைப்புள்ள, கல்யாண சுந்தரம் (கல்யாணம் ஆகல), புல்லட் பாண்டி, வீரபாகு,வெடிமுத்து,அய்யாசாமி,தீப்பொறி திருமுகம்,கிரிகாலன் ( வெல்கம் டூ கிரிகாலன் மேஜிக் ஷோ) பாடி சோடா,படித்துறை பாண்டி, திகில் பாண்டி,கபாலி கான், ஸ்நேக் பாபு, என்கவுண்டர் ஏகம்பாரம்,வண்டு முருகன்,அலார்ட் ஆறுமுகம், பானர்ஜி,ஸ்டைல் பாண்டி இந்த பெயர்களை நீங்கள் படிக்கும்போதே அதில் உள்ள நகைச்சுவை காட்சி உங்கள் நினைவுக்கு வரும்.வடிவேல் நமக்குள் கலந்த ஒரு கலைஞன்.

advertisement by google

வடிவேல் அவர்களுக்கு பிறந்த நாள் இன்று

advertisement by google

.. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣

advertisement by google

Related Articles

Back to top button