உலக செய்திகள்

கிளியை கைதுசெய்து சிறையில் அடைத்த நெதர்லாந்து போலீஸார்

advertisement by google

♦கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக ‘கிளி’ க்கு சிறை!

advertisement by google

?கொள்ளை வழக்கில் மனிதர்களை போன்று கிளியை சிறைக்குள் அடைத்திருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

advertisement by google

?நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்சில் கடை ஒன்றில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில், கொள்ளையில் ஈடுபட்டவருடன் கிளி ஒன்றையும் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

?இதுதொடர்பாக மனிதர்கள் அடைக்கப்படும் சிறையில், கிளியை அடைத்தது தொடர்பான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் அந்நாட்டு போலீசார் பதிவிட்டது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானது.

advertisement by google

?சம்பவத்தின் போது, கொள்ளையடித்த நபரின் தோளில் அவர் வளர்க்கும் கிளியும் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே, இக்கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டதாக கருதி கிளியை சிறையில் அடைத்ததாக நெதர்லாந்து போலீசார் விளக்கம் அளித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

advertisement by google

?சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிளியை, தாங்கள் கூண்டில் அடைக்கவில்லை எனவும், அதற்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும், நெதர்லாந்து போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

advertisement by google

?இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்ததால் சிறையில் அடைக்கப்பட்ட கிளிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

advertisement by google

?சிறைக்கம்பிக்குள் அடைக்கப்பட்ட பறவை, இப்போது சுதந்திரக்காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

advertisement by google

Related Articles

Back to top button