இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

525 மின்சார பேருந்துகளை ஏலமுறையில் தனியார் வாங்கி இயக்க உள்ளனர்

advertisement by google

advertisement by google

தமிழகத்தில் விரைவில் இயக்கப்பட உள்ள 525 மின்சார பேருந்துகளையும், ஏல முறையில் தனியார்கள் வாங்கி இயக்க உள்ளனர்

advertisement by google

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவை என்பதுடன், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், இதே போன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக மொத்தம் 525 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன. இந்த பேருந்துகளை தமிழக அரசு வாங்காமல் தனியார்கள் வாங்கி, இயக்குவதற்காக ஏல முறை பின்பற்றப்பட இருக்கிறது.\r\n\r\nஅதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கும் – அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்.அதன்படி, பணிமனையில் அமைக்கப்படும் சார்ஜிங் நிலையங்கள் தவிர்த்து, மின்சார பேருந்துகளை வாங்குவது, பராமரிப்பதை ஏலம் எடுப்பவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.\r\n\r\nஇந்த பேருந்துகளை அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் இயக்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. ஆனால், பயணிகளிடம் இருந்து பேருந்துக்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகமே வசூலிக்கும்.\r\n\r\nபின்னர் ஒரு கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட தொகை வீதம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்ததாருக்கு வழங்கப்படும். பேருந்து இயக்குவதற்கான வழித்தடம், கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு போக்குவரத்து கழகத்திடமே இருக்கும்.போக்குவரத்து தொழிற்சங்கள் எதிர்ப்பை மீறி, முதன் முறையாக தமிழகத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button