தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பூமிகாதிருநங்கையை திருமணம் செய்தவாலிபர் சேலம் கமிஷ்னர் ஆபிஸில் தஞ்சம் ? எங்களை பிரிச்சிராதீங்க வாலிபர் கிளுகிளு பேட்டி

advertisement by google

advertisement by google

பூமிகாதான் எனக்கு வேணும்.. அவதான் என் உயிர்.. எங்களை பிரிச்சிடாதீங்க” என்று திருநங்கையை காதலித்து மணந்த இளைஞர் சேலம் கமிஷனர் ஆபீசில் தஞ்சம் அடைந்தார்!

advertisement by google

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் பூமிகா. 27 வயதாகிறது. திருநங்கையான இவர், பிடெக்., படித்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு நகைக்கடையில் சேலை செய்யும்போது, எலக்ட்ரீஷியன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நெருக்கம் ஆனது.. காதலாக மலர்ந்தது.. எப்படியோ வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் 3 வருட காதலுக்கு பின், 5 மாசத்துக்கு முன்பு நெல்லையில் ஒரு கோயிலில் வைத்து பூமிகாவுக்கு தாலி கட்டினார் அருண்குமார். விஷயம் வீட்டுக்கு தெரிந்து அருண்குமாரின் பெற்றோர் கொதித்து போய்விட்டனர். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத அருண்குமார், நெல்லையில் தனியாக வீடு எடுத்து வாடகைகு எடுத்து பூமிகாவுடன் குடிபோனார். ஆனாலும், அருண்குமாரின் பெற்றோரும், சொந்தக்காரர்களும், பூமிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தனர். இதனால், நெல்லையை விட்டு காலி செய்து, சேலத்தை அடுத்துள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் வந்து ஒரு வீடு எடுத்து தங்கினர். இதையடுத்து, சேலத்துக்கும் அருண்குமாரின் பெற்றோர் வந்துவிட்டனர். “என் பையனை விட்டுட்டு ஓடிப்போய்டு.. இல்லேன்னா கொன்றே புதைச்சிடுவோம்” என்று மீண்டும் மிரட்டல் விடுத்தனர். இப்படி ஒவ்வொரு ஊராக போனாலும் பின்னாடியே விரட்டி கொண்டு மிரட்டல் விடுத்ததால், அருண்குமார் சேலம் கமிஷனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து மனு தந்தார். “பூமிகா இல்லாமல் வாழ முடியாது.. அவள்தான் என் மனைவி, என் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள்” என்று முறையிட்டார்.இந்த மனு குறித்து விசாரிக்கும்படி சேலம் நகர மாநகர மகளிர் போலீசுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, மகளிர் போலீசும் அருண்குமாரின் பெற்றோரிடம் போனில் பேசி எச்சரிக்கை செய்தனர். திரும்பவும் அவர்கள் 2 பேரையும் பிரிக்க நினைத்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று சொன்னபிறகே இளம்தம்பதியினர் நிம்மதி ஆயினர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button