தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் உலகஅஞ்சல் தினவிழா

advertisement by google

கோவில்பட்டியில் உலக அஞ்சல் தின விழா

advertisement by google

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்கள் உறவினர்களுக்கு கடிதம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக அஞ்சல் தின விழா கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.நாடார் நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணியவும், வாகனங்களில் செல்லும் போது சீட் பெல்ட் அணியவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட வலியுறுத்தி அஞ்சல் அட்டையில் எழுதி ஊர்வலமாக கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் சென்று அங்குள்ள தபால் பெட்டியில் அஞ்சல் அட்டைகளை போட்டனர். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். நாடார் நடுநிலைப் பள்ளி செயலர் கண்ணன், ரோட்டரி சங்க இணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வலியுறுத்தி உறவினர்களுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button