இந்தியா

லாரி மோதி ½ மணி நேரம், உதவி கிடைக்காமல் ,உயிருக்கு போராடிய வாலிபர் பலி, மும்பையில் பரிதாபம்

advertisement by google

மும்பை :அவுரங்காபாத்தை சேர்ந்தவர் சுனில் காலே (வயது31). ஜால்னா ரோட்டில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் டீ கேனுடன் கடை அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜவகர்நகர் போலீசார் வாலிபர் மீது மோதிய வாகனத்தை அடையாளம் காண சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வாகனம் மோதி அடிபட்டு சுமார் ½ மணி நேரம் உதவி கிடைக்காமல் ரோட்டில் கிடந்தது தெரியவந்தது.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, வாலிபர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அவர் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த லாரி நிற்காமல் சென்றுவிடுகிறது. லாரி மோதி பலத்த காயமடைந்த வாலிபர் ரோட்டில் விழுந்தார். அவர் உதவி கேட்டு சத்தம் போடுகிறார். ஆனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் யாரும் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை. சாதாரணமாக வாலிபரை கடந்து சென்றனர். சிலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.இந்தநிலையில் வாலிபர் வேலை பார்த்த டீக்கடை உரிமையாளருக்கு தகவல் கிடைக்கவே அவர் ஓடி வந்து, சுனில் காலேயை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கையில் மனித நேயம் மரித்து போய் விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.இதுகுறித்து சுனில் காலேவின் தம்பி அமோல் கூறுகையில்,

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button