தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும் அமைச்சர் கீதாஜீவன் அவர்களும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம்✍️ 22வது வார்டில் போட்டியிடும் அந்தோனிபிரகாஷ் அவர்களது துணைவியார் ஜாஸ்மின் லூர்து மேரி, பத்தாவது வார்டில் போட்டியிடும் தோழர் முத்துலட்சுமி, 24வது வார்டில் போட்டியிடும் குருவுத்தாய் அவர்களுக்கும் ஆதரவாக வாக்குகள் கேட்டு பரப்புரை✍️வீரவாஞ்சி நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார் ✍️கோவில்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின் கனிமொழி எம்.பி. பேச்சு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

✍️ கோவில்பட்டியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும் அமைச்சர் கீதாஜீவன் அவர்களும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம்✍️ 22வது வார்டில் போட்டியிடும் அந்தோனிபிரகாஷ் அவர்களது துணைவியார் ஜாஸ்மின் லூர்து மேரி, பத்தாவது வார்டில் போட்டியிடும் தோழர் முத்துலட்சுமி, 24வது வார்டில் போட்டியிடும் குருவுத்தாய் அவர்களுக்கும் ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பின்பு வீரவாஞ்சி நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார் – கோவில்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின் கனிமொழி எம்.பி. பேச்சு

advertisement by google

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில் திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி, மகளிருக்கு முதலிடம் தரும் ஆட்சி, ஆகையால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ளது.பெண்களுக்கு அரசு பணியில் 40 சதவீத இடதுக்கீடு அறிவித்து அதனை செயல்படுத்தி கொண்டு இருக்கும் அரசு என்றும், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இலவசமாக செல்போன் வழங்குவோம் என்றார்கள் வழங்கவில்லை, இலவச வைஃபை வழங்கப்படும் என்றார்கள் வழங்கவில்லை, முதியோர்களுக்கு அரசு பஸ்சில் இலவசம் என்றார்கள் அதுவும் வழங்கவில்லை என்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.பால்விலையை குறைத்துள்ளோம், பெட்ரோல் விலையை நாங்கள் ஏற்றவில்லை என்றாலும் குறைத்துள்ளோம்.சமையல் கேஸ் விலையை ஏற்றுவது மத்தியரசு தான், அதனை குறைக்க முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம், சமையல் கேஸ் விலையை குறைக்க வேண்டியது பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் தான் என்றும், பின்னடி வாக்கு கேட்க வரும் பா.ஜ.கவிடம் நீங்களும் கோரிக்கையை கேளுங்கள், சிலிண்டர் விலை அதிகம் என்பதனை ஒத்துக்கொள்கிறேன், வாங்க முடியவில்லை, நிச்சயமாக குறைக்க வேண்டும் விரைவில் சிலிண்டர் விலையை குறைக்க கூடிய இடத்திற்கு திமுக வருவோம், இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும் அந்த இடத்திற்கு நாம் வருவோம். அதை நிச்சயமாக செய்து தரும் என்றும் கோவில்பட்டி நகராட்சியில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 432 லட்சம் ரூபாய் மதீப்பிட்டில், பேவர் பிளாக் சாலைகள் போடப்படுகிறது. சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 207 லட்ச ரூபாய் மதீப்பிட்டில் மற்ற பகுதியில் சாலைகள் கோவில்பட்டி நகராட்சியில் போடப்படுகிறது. கோவில்பட்டியில் 8 கிலோ மீட்டர் தூரம் 50 லட்ச ரூபாய் மதீப்பிட்டில் ஓடை தூர்வாரப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.கொரேனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 132 பேருக்கு தலா 50 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஊரக வாழ்வாதர இயக்கத்தின் மூலமாக 979 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வீரவாஞ்சி நகர் பகுதியில் பட்டா வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான அத்துணை முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்து கொள்கிறோம், தமிழகத்தில் முதன் முறையாக எழுத்தாளருக்கு அரசு சார்பில் மரியாதை வழங்கப்பட்ட மறைந்த எழுத்தாளர் கி.ராவிற்கு தான். அவருக்கான மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதுவும் விரைவில் திறக்கப்படும், மக்களின் கோரிக்கைகளுக்காக ஆட்சியில் இருந்தாலும். இல்லையென்றாலும் குரல் கொடுத்து போராடக்கூடியவர்கள், பாடுபடக்கூடியவர்கள் திமுக என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button