இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

விரிவான காலைசெய்திகள்(30.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????செலக்கரிச்சல் கிராமத்தில் குடிநீர் 35 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் வரும் நிலையில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நீராதாரமும் குறைந்த அளவே தண்ணீர் வரும் நிலையில் செலக்கரிச்சல் கிராமப் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான குடிநீரை உரிய முறையில் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் குறைந்த அளவு கொள்ளளவுக் குடிநீர் வரும் அத்திக்கடவு ( பில்லூர் ) திட்டக் குடிநீரை அதிகப்படுத்தித் தரவும் பொதுமக்களின் இன்னல்களைக் கலையவும் உடனடியாக துறை சார்ந்த அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் .
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ⛈⛈⛈சென்னையில் ஒருசில இடங்களில் சாரல் மழை

advertisement by google

சென்னையில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

advertisement by google

அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

advertisement by google


[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ⛽⛽⛽செப்.,30: பெட்ரோல் ரூ.77.36; டீசல் ரூ.71.19

advertisement by google

விலை விபரம்

advertisement by google

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ரூ.77.36 ஆகவும்,

advertisement by google

டீசல், நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.71.19 ஆகவும் உள்ளது.

advertisement by google

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?♨இந்தோனேசியாவில் கடந்த வியாழக்கிழமை மலுக்குத் தீவுகள் பகுதியில் அமைந்துள்ள அம்போன் நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 குழந்தைகள் உள்பட 30 பேர் ஆக உயர்ந்துள்ளது


[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?♨விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் தொடரில், நேற்று நடந்தப் போட்டியில் ஐதராபாத் அணி கேப்டன் அம்பத்தி ராயுடு டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?♨பாஜகவில் இணையும் நடிகை !!

விஜயசாந்தியின் கணவர் சீனிவாச பிரசாத் ,விஜயசாந்தி இப்போது, திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். பா.ஜ.,வில் சேருவது பற்றி, அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ”ஆனால், அதற்கான ஆலோசனை உள்ளது. இதற்கு முன், பாஜகவில் இருந்ததால், அந்த கட்சி யில் அவர் சேர்ந்தால் ஆச்சர்யமில்லை என கூறினார்.


[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

நாங்குநேரி தொகுதி இடைதேர்தல் மேற்பார்வையாளராக காங்கிரஸ் கட்சி சார்பாக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரி எம்எல்ஏவாக காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் இருந்தார். ஆனால் இவர் கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்று வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் வந்துள்ளதுதிமுக கூட்டணி சார்பாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நாங்குநேரி காங். தேர்தல் பணிக்குழுவின் பட்டியல் இன்று வெளியானது. இடைத்தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக வசந்த்குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழு செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும், ஒருங்கிணைப்பாளராக மயூரா ஜெயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி சிறப்பு பார்வையாளராக கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட பலர் நியமிக்கப்ட்டுள்ளனர். இதில் நாங்குநேரி தொகுதி மேற்பார்வையாளராக அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிமுக உறுப்பினர் பெயர் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் இடம்பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங். கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்தான் கே.பி.கே.செல்வராஜ். இவர் தற்போது நெல்லை மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு அதிமுக துணை செயலாளராக உள்ளார்.இவரின் பெயர்தான் காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் இருந்தது. இது பெரிய சர்ச்சையானதை அடுத்து தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.அதில், கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது. கே.பி.கே.ஜெயக்குமார் தான் இடைத்தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

இப்படி விவரம் தெரியாம பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம் , பலமுறை விவரமாக சொல்லி எங்களுக்கே அலுத்துப் போச்சு. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும் என கேள்விகேட்டு முதல்வர் எடப்பாடியை எச்சரித்துள்ளார் துரைமுருகன்

பல ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், எந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார். திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன? மேட்டூரிலிருந்து கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைத்திருக்கிறீர்கள் என முதல்வர் எடப்பாடி கேள்விகேட்டுள்ளார்.இதுகுறித்து விளக்கம் அளித்த துரைமுருகன்; மாண்புமிகு முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபகாலமாகஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில்உரையாற்றினாலும், தி.மு.க. ஆட்சியில் காவேரி – முல்லைப் பெரியார் பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதலமைச்சரும் – மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துப் போய்விட்டது. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும்.ஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் நேற்று சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதும், \”தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிககாலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். காவேரி – முல்லைப் பெரியார் -பாலாறு பிரச்சினைகளுககு எந்த தீர்வும் காணாதவர்\” என்று பேசியிருக்கிறார். அதாவது, கலைஞர் அரசு இந்தப் பிரச்சினைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.காவேரியாற்றில் வரும்தண்ணீரை கர்நாடகமும் – தமிழகமும் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்பது குறித்து 1924ஆம் ஆண்டு, இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. காலப்போக்கில் கர்நாடக அரசு, ஒப்பந்தத்தை மீறி நடக்க ஆரம்பித்தது. தமிழகத்துக்கு அதனால் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தான். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக இதைக் கொண்டு வந்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு தான். காவேரியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கண்டுபிடிக்க ‘உண்மை கண்டறியும் குழு\’வை கொண்டு வந்தவரும் கலைஞர் தான். \r\n\r\nமுல்லைப் பெரியாறு அணையில்152 அடி தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க.ஆட்சியில்தான் யாரையும் கேட்காமலும் -அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும் -அன்றைய அ.தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திரு.ராஜாமுகமது அவர்களின் கையெழுத்து இல்லாமலும், \”152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வோம்\” என ஒரு அடிமை முறி சீட்டை கேரள அரசுக்கு எழுதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். முல்லைப் பெரியாறு அணையில்142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றுஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது தி.மு.க. அரசுதான்.2013-14ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரையிலான இந்த ஆறுஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு 13,606 கோடி ரூபாய். ஆனால், மொத்தம் செலவு செய்ததோ 6,973கோடி ரூபாய்தான். இதை நான் குற்றமாகசொல்லவில்லை. 2018ஆம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின்அறிக்கை – 2019ல் தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது என துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார்.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை கேட்க முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இந்த நிதி ஆண்டின் இறுதியில் இதற்காக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பை அணுக முடிவு செய்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டுக்கொண்டு இருந்தது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டது. ஆனால் ஆர்பிஐ இதை தொடர்ந்து மறுத்தது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார். தொடர் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் இந்த பணம் பெறப்பட்டது. இது ஆர்பிஐ அமைப்பின் உபரி நிதி ஆகும். இதை அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை பெற்ற பின்பும் கூட நிதி நிலைமை சரியாகவில்லை. முக்கியமாக இந்தியாவில் இந்த நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டு ஜிடிபி 5% என்ற மிக மோசமான சதவிகிதத்தை தொட்டது. மத்திய அரசை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால் இந்த நிதி ஆண்டில் கண்டிப்பாக நிதி பற்றாக்குறை ஏற்படும், ஜிடிபி இறுதியாக மேலும் குறையும் என்று கணிக்கப்படுகிறது. ஆகவே இந்த நிதி ஆண்டின் இறுதியில் பணத்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை கேட்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2018 – 19 நிதி ஆண்டுக்கு ஈவுத் தொகை () மற்றும் இடைக்கால ஈவுத் தொகையாக ( ) ஆக சுமார் 40,000 கோடி கொடுத்தது.அதன்பின் தற்போது மீண்டும் மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இடைக்கால ஈவுத்தொகையாக மத்திய அரசு பணம் கேட்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போரட்டம்

இன்று காலை சுமார் 8:10 மணியளவில் சென்னை ஐஐடி கல்லூரிக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரித்து காங்கிரஸ் மாணவர் அணி சார்பில் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபடவுள்ளனர்.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

? இன்றைய முக்கியச் செய்திகள்..!

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதன்முறையாக இன்று சென்னை வருகிறார் மோடி. ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்‌.

இடைத்தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. அதிமுகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்.

வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை. வியாபாரிகள் கையிருப்பு வைத்திருக்கவும் கட்டுப்பாடு. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

பலத்த மழையால் தவிக்கும் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள். உத்தரபிரதேசத்தில் மட்டும் 4 நாட்களில் 93 பேர் மழைக்கு உயிரிழப்பு.

பதவி உயர்வுக்கான கால அளவை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு. அக்.30-ஆம் தேதி முதல் 48 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை.

திருப்பதியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது பிரமோற்சவம். 9 நாள் விழாவை காண திருமலையில் குவியும் பக்தர்கள்.

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பணியின்போது ஓய்வு நேரத்தினை ஓட்டுனர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், டிவிட்டரில் செலவிடக்கூடாது: போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

•┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?% விழுப்புரம் : செஞ்சி அருகே வடவனூரில் வேனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி

?% வேனில் கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் இறந்தனர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?% நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் இர்பான் சேலம் அருகே கைது

?% மொரீசியஸ் தப்பியதாக கூறப்பட்ட நிலையில் டேனிஷ்பேட்டை அருகே மாணவர் இர்பானை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னையில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கரணையில் இந்த சம்பவம் நடைபெற்றது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார். இதன் வழக்கு விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். சுபஸ்ரீ குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் பகுதியை சேர்ந்தவர். பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அதே சமயம் இவர் கனடாவில் மேற்படிப்பு படிப்பதற்காக தீவிரமாக முயன்று வந்தார். இதற்காக சில கல்லூரிகளில் அவர் விண்ணப்பம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான நுழைவுத்தேர்வை அவர் சில வாரங்கள் முன்பு எழுதினார்.இந்த நிலையில் இந்த தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் இவர் தேர்வாகி உள்ளார். இந்த சந்தோசமான செய்தியை தெரிந்து கொள்ள சுபஸ்ரீ தற்போது உயிருடன் இல்லை. இவரின் மரணமும், இந்த தேர்வு முடிவும் அவரின் குடும்பத்தை மொத்தமாக உலுக்கி உள்ளது.
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: ?% ?? ஈரோடு : சத்தியமங்கலம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததால் 40 மலை கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

?% ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சென்னையில் மோடி

அமெரிக்காவில் நான் தமிழ் பழமையான மொழி என்பதை தெரிவித்தேன்..

130 கோடி மக்களும் சேர்ந்து நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டிய நேரம் இது…
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் லாட்டரி விற்பதாக கூறி ஆட்டோ ஓட்டுநரிடம் மாமூல் வசூலிக்க சென்ற 4 செய்தியாளர்களுக்கு தர்ம அடி 3 பேர் தப்பி ஓடிவிட்ட நிலையில் வேலூர் மாவட்ட பாலிமர் செய்தியாளர் பாலாஜி என்பவரை பொதுமக்கள் பிடித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் இதுகுறித்து பேர்ணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தப்பியோடிய 4 போலி நிருபருக்கு வலைவீச்சு
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: தகவல்

?% உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமாணி சென்னையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கி உள்ளதாகவும் , அதைப் பற்றி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 10:51 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

பாண்டவர்கள் வழியில் அதிமுக மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது. கெளரவர்கள் வழியில் திமுக கூட்டணி அதர்ம வழியில் செயல்பட்டு வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்
[9/30, 10:52 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி இரண்டாம் சீசனை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை அக்டோபர் 5 முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில், சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.*

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை அக்டோபர் 5 முதல் டிசம்பர் 28 ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சிறப்பு மலை ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்தது.

அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ப்ரீமியம் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. காலை 09.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கல்லாறில் 09.28 மணி முதல் 09.35 மணி வரையிலும், ஹில்குரோவில் 10.46 மணி முதல் 11 மணி வரையிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு மலை ரயிலில் நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் முதல் வகுப்பில் 72 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் நூறு இருக்கைகளும் இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும்
இந்த சிறப்பு ரயில் சேவையின் பயணக் கட்டணமாக முதல் வகுப்பிற்கு ரூ. 1,100-ம், 2-ம் வகுப்பிற்கு ரூ. 800-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை முதல் வகுப்பிற்கு ரூ.1,450, இரண்டாம் வகுப்பிற்கு ரூ.1,050, பயணக்கட்டணமும், உதகை குன்னூர் இடையே முதல் வகுப்பிற்கு ரூபாய் 550 ம், இரண்டாம் வகுப்பிற்கு ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 200 மதிப்பிலான கிப்ட் பொருட்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த இரண்டாம், சீசனுக்காக சிறப்பு கூடுதல் மலை ரயில் இயக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே மாணவர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் வெடித்து சிதறியது

வடவானுர் கிராமம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தில் புகை

நேரலை செய்திகள்
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சிங்கப்பூர் நாட்டு தாய்மொழிகளில் தமிழும் ஒன்று – சிங்கப்பூர் கல்வி அமைச்சர்
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தமிழ்நாடே முன்னோடி..

தன்னார்வ இரத்ததானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது…

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியீடு
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு
[9/30, 10:54 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

திருச்சி : தனியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் மகாலெட்சுமி என்ற ஆசிரியை கடத்தல். அதிமுக வட்டச் செயலாளர் ‘வணக்கம்’ சோமு என்பவருக்கு போலீசார் வலை.

advertisement by google

Related Articles

Back to top button