தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறு

சொகுசு வீடாக மாறிய பஜாஜ் ஆட்டோ? சகல வசதிகள் கொண்ட அடுக்குமாடி வீடாக மாற்றிய தமிழக இளைஞரின் சாதனை?

advertisement by google

சகல வசதிகள் கொண்ட அடுக்குமாடி சொகுசு வீடாக மாறிய பஜாஜ் ஆட்டோ… தமிழக இளைஞரின் அசத்தலான ஒர்கவுட்..!

advertisement by google

பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர ஆட்டோவை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சொகுசு வீடுகளுக்கு இணையாக மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

advertisement by google

உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் இவை மூன்றும்தான் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகள் ஆகும். இதில் கார், பைக், இண்டர்நெட் என புதிதாக எது இணைந்தாலும் அவை தற்காலிக தேவைகளே.

advertisement by google

புதிதாக இணையும் எதையும் நம்மால் இழந்துவிட்டு வாழ முடியும். ஆனால் உணவு, உடை, இருப்பிடம் இவைகளின்றி வாழ்வது மிகவும் சிரமம். இதன்காரணமாகவே, ஆதி மனிதர்கள் உடைக்காக மரம், செடி மற்றும் கொடிகளை பயன்படுத்தினான். மேலும், உறைவிடத்திற்காக மலை குகைகளைப் பயன்படுத்தினார்கள்.

advertisement by google

ஆனால், இன்றைய நவீன காலத்தில் அவையனைத்தும் அப்படியே மாறிவிட்டன. உடையில் ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட், சுடிதார் என பரிணாம மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

advertisement by google

இதேபோன்று, உணவிலும் பீட்சா, பர்கர், துரித உணவு என பல புகுந்துள்ளன. இதுமட்டுமின்றி, கூரை வீடுகள் போய் கண்ணாடிகளாலேயே உருவாக்கப்பட்ட விண்ணைத் தொடும் மாளிகைகள் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

advertisement by google

இவ்வாறு, மனிதர்களின் அன்றாட அவசிய தேவைகளில் பல பரிமாணங்கள் புகுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், உறைவிடத்தில் புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழக இளைஞர் ஒருவர் தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

advertisement by google

நாமக்கல் மாவட்டம் பரமதி-வேலூரைச் சேர்ந்தவர் பி.ஆர். அருண் பிரபு. 23 வயதுடைய இந்த இளைஞர் தற்போது பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆர்கிடெக்சர் நிறுவனமான பில்போர்டில் பணியாற்றி வருகின்றார்.

இவர்தான் பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ மாடல் ஆட்டோரிக்சாவை பயன்படுத்தி சொகுசு வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். பொதுவாக இதுபோன்று வாகனங்களை வீடாக மாற்றியைக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரமாகும்.

அந்தவகையில் உலகம் முழுவதும் பரவியதுதான் மோட்டார் ஹோம்ஸ், கேம்பர் வேன், கேரவன்கள் மற்றும் ஆர்வி-க்கள்.

இதில், மோட்டார் ஹோம்ஸ் என்பது வீடு இல்லாத நபர்கள் தங்களின் வாகனத்தையே வீடாக பயன்படுத்துவதாகும். கேம்பர் வேன்கள் முகாமிட்டு தங்குபவர்கள் மத்தியில் புகழ்வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதில், அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் உருவாக்கப்பட்டிருக்கும்.

கேரவன் என்பது அனைத்து சொகுசு வசதிகளையும் அடங்கிய ஓர் வாகனம் ஆகும். இது, திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்தகைய வாகனத்தின் அடிப்படையில்தான் நாமக்கல்லைச் சேர்ந்த அருண் பிரபு பஜாஜ் ஆட்டோவை மாற்றியமைத்துள்ளார். இவையனைத்தையும் வெறும் ஐந்து மாதங்கள் இடைவெளியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

அருண் பிரபு பிற இளைஞர்களைப் போலவே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெகு நாட்களாக நினைத்து வந்தார். ஆனால், அந்த எண்ணத்தை வெறும் நினைவுகளாகவே மனதில் பூட்டி வைக்காமல், அதனை நிஜ வாழ்க்கையிலும் நிறைவேற்றியுள்ளார். இதற்காக பயன்படுத்தப்பட்டதுதான் இந்த மூன்று சக்கர வாகன சொகுசு வீடு.

இதுவரை, நான்கு சக்கர பெரிய ரக வாகனங்களில் மட்டுமே இத்தகைய உருமாற்றம் செய்யப்பட்டு வந்தநிலையில், புதிய முயற்சியாக மூன்று சக்கர வாகனத்தில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இதுபோன்று, மூன்று சக்கர வாகனத்தில் இத்தகைய மாற்றத்தை செய்வது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. மூன்று சக்கர வாகனங்களின் நிலைத் தன்மை நான்கு சக்கர வாகனங்களைப் போன்று இருக்காது.

ஆகையால், ஒவ்வொரு மாற்றத்தின்போதும் ஆட்டோ சாய்ந்துவிடாத வண்ணம் இருக்க அவர் பல கடினமான சூழலைச் சந்தித்துள்ளார். அவ்வாறு அதன் எடை அனைத்து பக்கத்திற்கும் சமமாக பரவும் வகையில் கூடுதல் பாகங்களைப் பொருத்தியுள்ளார்.

ஆட்டோவின் சரக்குகளை ஏற்றிச்செல்லும் பாடியை நீக்கிய அருண் பிரபு, அவற்றிற்கு பதிலாக உல்லாச விடுதியில் காணப்படுகின்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட அடுக்குகளை கட்டமைத்துள்ளார்.

அந்தவகையில், ஒரு நபர் ஓய்வெடுத்து தங்குவதற்கான சகல வசதிகளையும் இதில் புகுத்தியுள்ளார் அருண்.

முக்கியமாக மேல் தள படுக்கையறை (ஒன்று), குளியலறை, சமையலறை (அனைத்து பாத்திரங்களையும் வைத்துக்கொள்ளலாம்), பணியிடம், வாட்டர் ஹீட்டர் மற்றும் ஒரு கழிப்பறை கூட உள்ளது. இந்த கழிப்பறையானது படுக்கையறைக்கு கீழாகவே உள்ளது. அதாவது லிவிங் ரூம் என கூறப்படும் அதே பகுதியில் அது நிறுவப்பட்டுள்ளது.

இத்துடன், வாகனத்தின் மேற்புறத்தில் 250 லிட்டர் நீர் தொட்டியும், 600W சோலார் பேனலும் பொருத்தப்பட்டுள்ளது. இது கேபினுக்குள் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்யவும், வாகனத்திற்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரித்துக்கொள்ளவும் உதவும். இத்துடன், சன்பாத் எனப்படும் சூரிய குளியல் செய்வதற்கு ஏதுவாக குடையுடன் கூடிய இருக்கை நிறுவப்பட்டுள்ளது.

இது இயற்கையை ரசிக்கவும், காற்றோட்டமாக ஒய்வெடுக்கவும் பயன்படும். தொடர்ந்து, அலமாரிகள் மற்றும் துவைத்த துணிகளை உலர வைக்கின்ற வகையில் வெளிப்புறத்தில் நீட்டிக்கக்கூடிய துணி ஹேங்கர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஆட்டோவில் (சொகுசு விடுதியில்) காணப்படுகின்றது. மேலும், மேற்கூரைக்கு செல்வதற்கு ஏதுவாக ஏணிகள் மற்றும் கதவுகள் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கேபினுக்குள் சமைப்பதற்காக ஏதுவாக இயற்கை எரிவாயு அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இது விரும்பிய உணவை சமைத்து உண்ண உதவும்.

ஒட்டுமொத்தத்தில் இந்த பஜாஜ் ஆட்டோவில் சில சொகுசு விடுதிகளில்கூட காணப்படாத வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர பயணத்திற்கு செல்லும் வணிகர்கள் மற்றும் ஆராய்ச்சி பணிக்காக அடர் வனத்திற்கு செல்பவர்களுக்கு இந்த வாகனம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என அருண் பிரபு தெரிவித்துள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button