t

கோவையில் ஆபரேசன் ஸ்மைல்’ திட்டம் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர் என 31 சிறுவர்கள் மீட்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவையில் ஆபரேசன் ஸ்மைல்’ திட்டம் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர் என 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

advertisement by google

கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் கடந்த 1-ம் தேதி துவங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்திய இந்த சோதனையின்போது 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் சுந்தர் கூறும்போது, ஹோட்டல், மெக்கானிக் ஷாப், கடைகளில் பணிபுரிந்தவர்கள், பேருந்து, ரயில்நிலையங்களில் பிச்சை எடுப்போர் என 14 முதல் 18 வயதுக்குள்ளான 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்டவர்கள், குழந்தைகள் நலக்குழு வாயிலாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்' என்றார். இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சாலையில் குழந்தைகளைவைத்து பிச்சை எடுப்பவர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கலாம்.ஆபரேசன் ஸ்மைல் திட்டம்’ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button