t

உலகபிரசித்திபெற்ற காமநாயக்கன்பட்டி புதுமைபுனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா,கொடியேற்றத்துடன் தொடக்கம் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு✍️ கலைகட்டிய விழாவில் நற்செய்தி உரையும், அசனவிருந்து ,வானவேடிக்கை என கண்கொள்ளா காட்சியளிப்பு

advertisement by google

உலகபிரசித்திபெற்ற
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

advertisement by google

காமநாமக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

advertisement by google

விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

advertisement by google

உலக பிரசித்திபெற்ற காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா மாதா விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 6.55 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி நடைபெற்று கொடி மரம் நடப்பட்டது. தொடர்ந்து 8 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கொடியேற்றப்பட்டது. விழாவில் இலட்சகணக்கான பக்தர்கள் அனைவருக்கும் அசன விருந்து அளிக்கப்பட்டது , விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. விழாவில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, தூத்து மாவட்ட திமுக நிர்வாகிகள் , கோவில்பட்டி சட்டமன்ற திமுக நிர்வாகிகள் , காமநாயக்கன்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் லூர்துராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.

advertisement by google

தொடர்ந்து திருப்பலி நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணியளவில் மறையுரை சிந்தனை மற்றும் நற்செய்தி வழங்கப்படுகிறது. வருகிற 12-ந் தேதிகாலை 6 மணிமுதல் இரவு 7 மணி வரை அனைத்து பக்த சபையினர் சார்பில் மரியன்னை மாநாடு நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் மற்றும் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜீடுபால்ராஜ் மற்றும் பங்குதந்தையர்கள் சார்பில் புதுநன்மை விழா நடக்கிறது.

advertisement by google

ஆடம்பரகூட்டு திருப்பலி

advertisement by google

வருகிற 14-ந் தேதி பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் பங்குதந்தையர்கள் பங்கு பெறும் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. முக்கிய விழா வருகிற 15-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் அருட்தந்தை ஹென்றிஜெரோம் முன்னிலையில் தேரடி திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை விழாக்கால சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மதியம் 2 மணியளவில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணியளவில் ஆங்கிலத்தில் திருப்பலியும் இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் மற்றும் திருத்தலஅதிபர் அந்தோணி குரூஸ், உதவி பங்குதந்தை செல்வின் ஆகியோர் செய்திருந்தனர். கொடியேற்று விழாவில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வானவேடிக்கை நிகழ்ச்சிகள் சிறப்பாக கண்கொள்ளா காட்சியளித்தன.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button