இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காலைவிரிவானபரபரப்பு செய்திகள்(21.9.2019)தமிழகம்இந்தியாஉலகம்

advertisement by google

???விண்மீண்நியூஸ்???♦புதிய மோட்டார் வாகன சட்டத் சட்டத்தை தடை செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்

advertisement by google

?மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன புதிய சட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கம் மேலும் அதிகப்படியான நெருக்கடியை மக்களின் மீது திணிக்கிறது.

advertisement by google

?ஏனெனில் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கான காரணங்களை கட்டணங்களை உயர்த்தியது மட்டுமல்லாது போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கும் அபராத கட்டணங்களை அபரிதமாக உயர்த்தியுள்ளது.இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

advertisement by google

?இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் திரும்பப் பெற கேட்டும், சிவில் நீதிமன்றங்களில் தமிழ் தெரியாத நீதிபதிகள் நியமிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் குளித்துறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
♦Friends Social Media
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு நிறைவு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 150 அடி உயர சாதனை கொடிக்கம்பம் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நிறுவப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (21.9.2019) காலை 11.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ளது. தாங்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

advertisement by google
  • கே.எஸ்.அழகிரி,
    தலைவர், த.நா.கா.க. -அரும்பாக்கம். க.வீரபாண்டியன். தலைவர்,
    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
    சூளைராமலிங்கம்
    து.தலைவர்
    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
    [9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

advertisement by google

தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்ற பின்பு

advertisement by google

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்தார் குடியரசுத் தலைவர்

advertisement by google

வினீத் கோத்தாரி நாளை மறுநாள் பொறுப்பேற்க வாய்ப்பு

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு, 150 அடி உயரத்தில் நினைவு கொடிக்கம்பத்திற்க்கான அடிக்கல் நாட்டு விழா நாளை ( 21 .09 .2019 ) சனிக்கிழமை காலை 11 .30 மணியளவில், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தின் முன்பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துக்கொண்டு
சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களன்புள்ள

இரா.மனோகர்.M.Tech,M.B.A.,

உறுப்பினர் – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,
பொதுக்கூழு உறுப்பினர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: போலீஸ் சார்பில் குறை தீர்ப்பு முகாம்: புதுவண்ணாரபேட்டை சமுதாய கூடம், இணை ஆணையர் கபில்குமார் சாரட்கர், காலை 11 மணி.
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: செப்.6ல் தஹில்ரமானி ராஜினாமா கடிதம் அனுப்பியதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விளக்கம்

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ததால் ராஜினாமா செய்தார் ரமானி
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: ? JUST IN?

♈?சென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகா விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது; விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால் 240 பயணிகள் உயிர்தப்பினர்..!
______________________
??????????
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.24 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.33 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: ஆற்றங்கரையில் மரங்களை நட்டு காவேரியை காப்பாற்றுவேன் என்பது காவேரியின் உரிமையை திசை திருப்பும் வேலை .. மேலும் மரம் வளர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆறு காக்கப்படும் என்பதும் அபத்தம்… க.காளிதாசன் தலைவர். ஓசை? ? (தயவுசெய்து பேச்சை முழுமையாக கேளுங்கள்.. நீங்களே சிந்தியுங்கள்)
[9/21, 9:39 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

நெல்லை: வீரநல்லூர் அடுத்த வெள்ளாங்குளி கிராமத்தில் திவான் முஜிபர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி : உதகை மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முற்பட்ட போது, நகராட்சி அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மார்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நடைபாதைகளில் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பேருந்து நிலையம் அருகில் சுமார் 8க்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். மேலும், நகரப்பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் சுமார் இருபது கடைகளில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பின்பு, கடையின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தங்களுக்குச் சரியான ரசீது உள்ளது எனவும் ஆகவே அந்த கடைகளை அகற்ற வேண்டாம், தாங்களாகவே எடுத்துக் கொள்வதோடு, கடைக்கு உண்டான ரசீதையும் தங்களிடம் காண்பித்து கடைகளை வைத்துக் கொள்கிறோம் என முறையிட்டனர். பின்பு இன்று மாலை வரை நேரம் தருமாறும் அதன்பின் தாங்களாகவே கடைகளை அப்புறப்படுத்தி விடுகிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கடைகள் மட்டும் குறியீடு செய்யப்பட்டு மீதமுள்ள கடைகள் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் மார்க்கெட் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்மையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் உள்ளாட்சி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டமானது இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்கான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியில் இணைந்து அவர்களுக்கு உண்டான சந்தேகங்களுக்கு ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
எனவே, இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் அதிகமானோர் விவசாயம் செய்ய மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுறுத்தலின் பெயரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடவேண்டும் எனவும் இயற்கை விவசாயத்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்து, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சுற்றுலா வரும் பாேது, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்களில் எவ்வாறு தண்ணீர் எடுப்பது என்பது குறித்து அனைத்து மொழிகளிலும் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகள், டம்ப்ளர்கள், தட்டுகள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரோடைகள், குடிநீர் ஆதாரங்களான அணைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர் நிலைகள் மாசுபாட்டு வந்த நிலையில், இந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை செய்ய பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பாட்டில்களை உபயோகிக்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தாமல் இருக்கவும் அவர் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வாட்டர் ஏடிஎம் மையங்கள் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ட்ராக், பைக்கரா மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 77 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் 1 ரூபாய்க்கு 200 மி.லி, 2 ரூபாய்க்கு 400 மி.லி, 5 ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீரை தங்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லலாம். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் எப்படி பிடிப்பது என்பது தெரிவதில்லை.
இது ஒருபுறம் இருக்க அரசு மதுபான கடைகளில் இயங்கும் தனியார் பார்கள் தங்களுக்கு இந்த வாட்டர் எடிஎம் களை பயன்படுத்தி தண்ணீர் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வாட்டர் ஏடிஎம்களை தவறுதலாகப் பயன்படுத்தி, அத்துமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், வாட்டர் எடிஎம் மையங்கள் அருகில், அனைத்து மொழிகளிலும் விழிப்புணர்வு பதாகைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி வெற்றி பெற, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல்சூளைகளுக்காக அதிகளவில் மண் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் மனு அளித்தனர்.
மனு அளித்த பின் பேட்டியளித்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு, தடுப்பணைகள் பாதிப்பு, யானை வழித்தடங்கள் பாதிப்பு என அனைத்து பாதிப்புகளையும் மீண்டும் அதிகாரிகளிடம் விளக்கி இருப்பதாகவும், மண் எடுப்பதை தடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்தார்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : உக்கடம் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று நிலையில், கட்டுமானத்தை எளிதாக்குவதற்காக அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக இடங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் புல்லுகாடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உக்கடத்தில் உள்ள தோபி கானாவில் தலைமுறை தலைமுறையாக 32 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் விரைவில் புல்லுகாடு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு மாற்றப்படுவார்கள். இந்த குடும்பங்களை இடமாற்றம் செய்யக்கூடிய புல்லுகாட்டில் குடியிருப்புகளைத் தமிழக சேரி அனுமதி வாரியம் (டி.என்.எஸ்.சி.பி) அமைத்து வருகிறது.
இந்நிலையில், உக்கடம்-ஆத்துப்பாலம் கட்டுமான திட்ட வடிவமைப்பின்படி, பாலத்தின் வளைவுகளில் ஒன்று, உக்கடம் தோபி கானா இடத்தில் இடம்பெறுகிறது. இதனை, பேரூர் பைபாஸ் சாலை மற்றும் பாலக்காடு சாலை செல்வதற்கு, வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதனிடையே, தோபி கானாவை ஒட்டியுள்ள மீன் சந்தை இடிக்கப்பட்டு, ஆறு மாடி கட்டிடமாக, 800 குடியிருப்புகள் அமைக்கப்படுகிறது. மீன் சந்தையை புல்லுகாடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உக்கடம் மீன் சந்தையின் மொத்த விற்பனை சங்கத்தின் தலைவர் எச் எஸ் பாவா, மீன் சந்தையை புல்லுகாட்டுக்கு மாற்றுவதற்கான இந்த நடவடிக்கை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை பாதிக்கும் என்றும் புல்லுகாடு புதிய வீட்டுவசதி வாரியத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சில்லறை சந்தை பொதுமக்களைப் பெருமளவில் பாதிக்கும் என்றார்.
மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அல் அமீன் காலனி மற்றும் அண்டை குடியிருப்பு காலனிக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் அந்த வழியையே பயன்படுத்துவதால், சாலையோர மீன் கடைகள், வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் என்று தெரிவித்த அவர், சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு இடத்தை மாநகராட்சி ஒதுக்கினால், அது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோயம்புத்தூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போன் அபியான் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களின் கைபேசியில் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கவேண்டும், என மாவட்ட ஆட்சியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போன் அபியான் திட்டத்தின் கீழ் 01.09.2019 முதல் கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய ஊட்டச்சத்து குழுமம் 3-வது கட்டமாக செயல்படுத்திடவும், இத்திட்டம் சார்ந்த 1800 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைபேசி வழங்கப்பட்டுள்ளது.”

“மேற்கண்ட கைபேசியில் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப விவரங்கள் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்துப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டம் குறித்து கேட்கப்படும் குடும்ப நிர்வாகம் குறித்த கணக்கெடுப்பு, தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வை திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லும் இணை உணவு, வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி பற்றிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, வளரிளம் பெண்கள், கர்ப்பகால பராமரிப்பு, பாலுட்டும் தாய்மார்கள் குறித்த கணக்கெடுப்பு ஆகிய விவரங்களை கைபேசியில் பதிவு மேற்கொண்டு திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்ளப்படுகிறது”, என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள வாகனங்களை கோயம்புத்தூர் வட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கோவை வடக்கு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டேவணி தொகைக்கான காசோலையினை வட்டாரப் போக்குவரத்து (வடக்கு) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது, என போக்குவரத்து அலுவலர், குமரவேல் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
“வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களால் உரிய வரி மற்றும் இணக்க கண்டணம் அரசுக்கு செலுத்தாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாகனங்களை தற்போது பொது ஏலத்தில விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் டேவணித் தொகையாக ரூ.10,000 க்கான வங்கி வரைவினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோவை (வடக்கு) என்ற பெயரில் எடுத்து கோவையில் செலுத்தத்தக்க 11.10.2019-க்குள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (வடக்கு) அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் சமர்பிக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”, என தெரிவித்தார்.
மேலும், டேவணித் தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும், 15.10.2019 அன்று வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம், என அறிக்கை மூலமாக தெரிவித்தார்.
மொத்தம் 8 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேற்கண்ட வாகனங்கள் கோவை (வடக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிடலாம் என வட்டார
போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊதிய உயர்வு கோரி துப்புறவு பணியாளர்கள் வேலைகளைப் புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் துப்புறவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள பல வார்டுகளிலும், இந்த ஒப்பந்த பணியாளர்களே அன்றாடம் குப்பைகளை சேகரித்து அதனை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலான ஊதியமே கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களுக்கு 190 ரூபாயும் ஆண்களுக்கு 230 ரூபாயும் அளிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பெயரில், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களுக்கான கூலியை 400 ரூபாயாக உயர்த்திய பிறகும் அதனை வழங்காமல் நகராட்சி ஒப்பந்ததாரர் காலதாமதம் செய்வதாக கூறி, 100க்கும் மேற்பட்டோர் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதிய உயர்வான 400 ரூபாய் கூலியை வழங்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனால், மேட்டுப்பாளையத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால் போராட்டம் தொடர்கிறது.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி என்ற பிரிவில் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் உள்ளதை கண்டித்து, தமிழ்நாடு-புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வமைப்பின், மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, “தமிழில் வழக்காடும் வழக்குரைஞர்களே சிரமப்படும் நிலையில் வெளி மாநில நீதிபதிகளை பணியமர்த்தினால் நீதிமன்றத்தை நாடி வரும் வழக்குகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும்”, என தெரிவித்தனர்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅மேட்டுப்பாளையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்படும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண்க்காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது தொடர்பாக வேளாண் அறிவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. வனக்கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், அந்தமான், டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்களை விவசாய விளைநிலங்களில் இருந்து உருவாக்கி தரிசு நிலங்களிலும் மர வளர்ப்பினை ஊக்குவிப்பதுடன் காடுகள் இன்றி தொழிற்சாலைகளுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்குவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மேலும், குறைந்த நீரினை பயன்படுத்தி வளரக்கூடிய மர வகைகளான மலைவேம்பு போன்ற மரங்களைக் கண்டறிந்து அதனை இந்திய அளவில் பரவலாக்குவதுடன் இதன் மூலம் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டிய பொருட்களை உருவாக்கி அவர்களது லாபத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கிற்கு வருகை புரிந்திருந்த வேளாண் அறிவியலாளர்கள் எழுதிய புத்தகங்களை கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் வெளியிட்டுப் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வன கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மலைவேம்பு மரங்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்ட பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர், பி.என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்று கூறி சொகுசு காரில் வந்த இரண்டு நபர்கள் பனியன் நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது, பாரதிநகர்
பகுதியிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆய்வு செய்வதாக கூறி வலுக்கட்டாயமாக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அந்த பனியன் நிறுவன உரிமையாளர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் அளித்தார்.
இதனை அறிந்த மோசடி நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதை அடுத்து சுதாரித்துக்கொண்ட கம்பெனி உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை மடக்கி பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த குமார் (45) கன்னியாகுமரியை சேர்ந்த முருகன்(60) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 84 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அனுப்பர்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : ஆண்டுதோறும்‌ அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ (அக்டோபர்‌ 2019 முதல்‌ அக்டோபர்‌ 8 வரை) “வன உயிரின” வாரமாக வனத்துறையால்‌ வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, வன உயிரின வாரம்‌ 2019 முன்னிட்டு பள்ளி – கல்லூரி மாணவ மாணவியாகளுக்கு மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள்‌ வரும்‌ 22.09.2019 (ஞாயற்றுக்கிழமை) காலை 8 மணி முதல்‌ கோவை தமிழ்நாடு வன உயா்‌ பயற்சியகம்‌, ஆர்‌.எஸ்‌ புரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில்‌ முதலிடம்‌ பெறுவோர்‌ மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பபடுவர்‌.

போட்டிகளின்‌ விபரம்‌ பின்வருமாறு:

  1. வினா – விடை போட்டி

தலைப்பு – சுற்றுச்சூழல்‌, வனம்‌ மற்றும்‌ வன உயிரினம்‌

  1. ஓவிய போட்டி

தலைப்பு தண்ணீருக்குள்‌ வாழ்க்கை

  1. பேச்சுப்‌ போட்டி

தலைப்பு – மனித-வன உயிரின மோதல்‌ மற்றும்‌ கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கைகள்‌

பிரிவு 9ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு மற்றும் கல்லூரி மாணவிகள்.

மேலும்‌ விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌:

மாவட்ட வன அலுவலகம் 04222456911
வனச்சரக அலுவலர்‌ -9786846074 / 98941 98055
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இன்று வழங்கினர்.

விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து கழகம் என்றாலே மக்கள் சேவை செய்யும் துறை. ஓரு நாளைக்கு 1.75 கோடி மக்களை பத்திரமாக ஏற்றி இறக்கி வரும் துறை.
இது குறித்து அவர் பேசியதாவது:
சேவை துறை என்பதால் வரவுக்கும் செலவிற்கும் இடைவெளி அதிகமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது. சென்னையை போல சிற்றுந்து கோவையிலும் விரைவில் இயக்கப்பட இருக்கின்றது.
ஜெர்மன் வங்கி மூலமாக 2000 மின்சார பேருத்தும், பி.எஸ்.6 பேருந்து 12 ஆயிரம் பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றன்.
820 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக கோவை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இயக்கப்படும். மேலும், 5844 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருக்கின்றது. தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளும் நவீனபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்:
சென்னையை போல கோவைக்கும் சிற்றுந்து இயக்க வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். பேருந்து பாடி கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் சிற்றுந்து இயக்கப்படும் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. விரைவில் சிற்றுந்து திட்டமும் செயல்படுத்தபடும் என்றார்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய மொட்டார் வாகன சட்டம் மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அபராதங்கள் குறைக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தபடும். தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
நிகழ்ச்சியில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்களுக்கு 1,093 கோடி ரூபாயினை வழங்கி முதல்வர் இன்று காலை துவக்கி வைத்தார்
தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கோவை, திருப்பூர் , பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கூடுலாக கூட்டம் வரும் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் எவ்வளவு பேருந்துகள் என்பது இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
[9/21, 9:42 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : ரத்தினபுரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்ற விசாரணை பிரிவு சட்டம் 107 பிரிவின் படி 200 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம் என்ற கருப்பு கவுதம்(25). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவின் படி, மாநகர காவல் துணை ஆணையரும், எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்டுமான பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அதிலிருந்து ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என அவரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி பெறப்பட்டது. ஆனால், கடந்த 5-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கவுதம் ரத்தினபுரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த 17-ம் தேதி கவுதம் வெளியே வந்தார்.
ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியை மீறியதால், ரத்தினபுரி காவல்துறையினர், கவுதமை நேற்று மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
உறுதிமொழியை மீறியதால், நேற்றிலிருந்து வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வரை 200 நாட்கள் கவுதமை சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து கவுதம் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவை பயன்படுத்தி குற்றவாளிகள் தொடர்ந்து மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.???winmeennews.com???

advertisement by google

Related Articles

Back to top button