இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பெண்களுக்கு நீதி கேட்டு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னையில்கண்டன ஆர்ப்பாட்டம் ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பெண்களுக்கு நீதி கேட்டு சமத்துவ மக்கள் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் :

advertisement by google

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்புணர்வு படுகொலைகளை கண்டித்தும் மேலும் உத்திரபிரதேச மாநிலம் சிறுமி கூட்டு பலாத்காரம் படுகொலையை கண்டித்தும் சமத்துவ மக்கள் கழகம் மகளிர் அணி சார்பில் பெண்கள் மீதான தொடர் பாலியல் கொடுமையைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.எர்ணாவூர் நாராயணன் Ex.M.L.A.அவர்கள் துவக்கி வைத்தார் மாநிலத் துணைச் செயலாளர் மாலதி தலைமை கழக பேச்சாளர் தேவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொருளாளர் கண்ணன் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து கொள்கை பரப்பு செயலாளர் k.சுந்தரேசன் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் லாடு பாஸ்கர் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கல்பனா குணசுந்தரி,தேவி,கல்யாணி வர்ஷா,மல்லிகா,காந்திமதி,பவானி, ஜெயா ,பிரபா,ராஜபுஷ்பா., கலையரசி,விஜயா,தாரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

advertisement by google

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி தலைவர் திரு.எர்ணாவூர் நாராயணன் பேசுகையில் மத்திய மாநில அரசுகள் பெண்களை பாதுகாக்க தவறி விட்டதாக கூறினார்.தமிழக அரசு கட்சி தலைமை குறித்து மட்டுமே கவலை கொள்வதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க முன் வர மறுக்கிறது எண்றார்.தி.மு.க.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் வன்முறை சம்பவங்கள் குறித்து தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தி.மு.க.தலைவர் ஸ்டாலின் கூறியதை வரவேற்று பேசினார்,மேலும் திண்டுக்கல் அருகே சிறுமி கொலை செய்யப்பட்டதில் மாநில அரசு புலன் விசாரணை சரிவர நடத்தாமல் குற்றவாளிகள் விடுதலை செய்யும் அளவிற்கு மாநில அரசு நடந்து கொண்டது கடும் அதிருப்தி தருவதாக இருக்கிறது என்றார்.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் எங்கள் கட்சி தலைவர் பேசினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button