இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தமிழகத்தில் 2024ல் தான் சட்டமன்ற தேர்தல் ,நாங்கள் சொன்னால் டெல்லி கேட்கும்- அமைச்சர் கடம்பூர் ராஜீ பேச்சு

advertisement by google

நாங்க சொன்ன டெல்லி கேட்கும் -தமிழகத்தில் 2024ல் சட்டமன்ற தேர்தல் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேச்சு

advertisement by google

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வினோபாஜி ஏற்பாட்டின் பேரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

advertisement by google

கூட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கடம்பூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் நாகராஜா, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் அல்லிக்கண்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி, முன்னாள் கயத்தார் ஒன்றிய பொருளாளர் விஜயராஜ் பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், தூத்துக்குடி ஆவின் இயக்குனர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக கயத்தார் நகரச் செயலாளர் கப்பல் கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு, விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், திரைப்பட இயக்குனரும் நடிகருமான ரவி மரியா, மாவட்டக் கழக துணைச் செயலாளர் மோகன், தலைமைக் கழகப் பேச்சாளர் இளைய கவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

advertisement by google

இந்த கூட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு பேசுகையில்
கடைசி தமிழன் இருக்கும் வரை அண்ணாவின் புகழ் நிலைத்து நிற்கும்,
அண்ணாவின் புகழ் இருக்கும் வரை அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றும்,அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னவர்கள் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள்,1989ல் திமுக ஆட்சியை கலைத்து 1991ல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா,பாஜக மத்தியில் ஆட்சிக்கு காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்றும், 2 முறை இழந்த சின்னத்தை மீட்டெடுத்த இயக்கம் அதிமுக என்றும், மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் முதல்வர் கனவு தான், கனவு நாயகன் மு.க.ஸ்டாலின் என்றும், நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல் பொதுத்தேர்தல் என்று மு க ஸ்டாலின் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஒன்பது இடங்களை பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அவர் கணக்குப்படி பார்த்தால் எங்களுக்கு அடுத்த தேர்தல் 2024 தான்.நாங்க சொன்ன டெல்லி கேட்கும், அவர்களும் நாடாளுமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் 2024ல் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்றும்,அதிமுக ஆட்சியில் திமுக எம்.எல்.ஏக்கள் வளமாக இருக்கிறார்கள் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.

advertisement by google

கூட்டத்தில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் கடம்பூர் நகர செயலாளர் வாசமுத்து ,கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன்,மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான கணேஷ் பாண்டியன், நிலவள வங்கி தலைவர் ரமேஷ், இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ் குமார், முன்னாள் தலைவர் ஈஸ்வர பாண்டியன், உன்னால் நகர்மன்ற உறுப்பினர் ஜெமினி என்ற அருணாச்சல சாமி, சௌந்தர்ராஜ், அல்லித்துரை, அலங்கார பாண்டியன், குடியரசு பாண்டியன், ஆறுமுக பாண்டியன், ராமமூர்த்தி ,பழனிக்குமார் உள்பட திரளான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் செந்தில் செல்வன், ஒன்றிய மாணவரணி உத்தண்டராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு முருகன் ஆகியோர் நன்றி உரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை கயத்தாறு ஒன்றிய கழகச் செயலாளர் வினோபாஜி செய்திருந்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button