பயனுள்ள தகவல்மருத்துவம்

முகத்திற்கு பவுடர் போட்ட கொஞ்ச நேரத்தில் எண்ணெய் லிட்டர் கணக்குல வழியுதா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

? முகத்திற்கு பவுடர் போட்ட கொஞ்ச நேரத்தில் எண்ணெய் லிட்டர் கணக்குல வழியுதா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு

advertisement by google

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மை உள்ள சருமம் காணப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான சருமம் அமைவதில்லை. அதனால் தான் ஒருவர் முகத்திற்கு பயன்படுத்தும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக அரிப்பு அல்லது தடிமன் ஏற்படுகிறது. ஒருவருக்கு வறண்ட சருமம் இருக்கும், ஒருவருக்கு சாதாரண சருமம் இருக்கும், இன்னொரு தரப்பினருக்கு அதிகப்படியான எண்ணெய் தன்மை உள்ள சருமம் காணப்படும்.

advertisement by google

இப்போது எண்ணெய் தன்மை அதிகம் உள்ள சருமம் உடையவர்கள் என்ன செய்தால் தங்களுடைய முகத்தை பளபளவென பட்டு போல் வைத்துக் கொள்ள முடியும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

advertisement by google

எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் முதலில் முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை நிறுத்த வேண்டும். இதை செய்தாலே உங்களுடைய பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

advertisement by google

மீதி பிரச்சனை தீர கீழ்வரும் இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்கள்.

advertisement by google

அதிகப்படியான எண்ணெய் தன்மை உள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதை காட்டிலும் நீங்கள் சோப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். இயற்கையாக கிடைக்கும் கற்றாலை ஜெல் மிக மிக நல்லது.

advertisement by google

கடலை மாவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு டீஸ்பூன் கடலைமாவு கொண்டு முகத்தை நன்கு தேய்த்து கழுவி வந்தால் எண்ணெய் தன்மை உள்ள சருமத்தில் பிசுபிசுவென இருப்பது குறையும். ஒரு விரலால் உங்கள் முகத்தை தொட்டால் கைகளில் எண்ணெய் அப்படியே ஒட்டியிருக்கும். இது போன்றவர்களுக்கு எளிதில் மாசு, தூசு போன்றவைகளை சருமம் உட்கிரகிக்கும். இதனால் முகப்பருக்களும், கட்டிகளும் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் எண்ணெய் தன்மை குறைய பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை.

advertisement by google

வீட்டில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியாமல் அவற்றைக் கொண்டு லேசாக மசாஜ் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, பப்பாளி, ஆப்பிள், கேரட் போன்றவைகளை நறுக்கும் பொழுது சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கைகளால் குழைத்து முகத்தில் பூசி காயவிட்டு முகத்தை அலம்பிக் கொள்ளலாம்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சாதாரண தண்ணீரை விட குளிர்ந்த தண்ணீர் அல்லது சுடுதண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து முகத்தை கழுவலாம்.

முகத்தில் மோர் தடவி உலர வைத்து பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கும். வெள்ளரிக்காய் நறுக்கினால் வெள்ளரிக்காயை முகம் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளலாம். இப்படி உங்கள் கண்களுக்கு முன்னால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தியே உங்கள் கனவுகளை நிஜமாக்கலாம்.

அதைவிடுத்து செயற்கையாக கிடைக்கும் எந்த க்ரீம் மற்றும் ஃபேஸ் வாஷ்களையும் உபயோகிக்காதீர்கள். இதனால் தற்போதைக்கு தீர்வு கிடைத்தாலும் நிரந்தர தீர்வு கிடைக்காது. நிரந்தர தீர்வுக்கு கடலை மாவு அல்லது பயத்தம் மாவு போன்றவற்றை தொடர்ந்து முகத்திற்கு உபயோகப்படுத்தலாம். மேலும் அரிசி மாவு ஒரு டீஸ்பூன் மற்றும் அதனுடன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து முகத்திற்கு மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் நீங்கி எண்ணெய் பசையுள்ள சருமம் பட்டுப்போல் மின்னும். நீங்களே தொட்டுப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button