இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் ஆடிக்கொடை விழா – பொதுமக்கள் அனுமதி இல்லாமல் திருவிழாநடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

குலசேகரபட்டிணம் முத்தாரம்மன்
ஆடிக்கொடை விழா – பொதுமக்கள் அனுமதி இல்லாமல் திருவிழாநடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில்
ஆடிக்கொடை திருவிழா திருக்கோவில் வளாகத்தில் நடைபெறும் எனவே பொதுமக்கள்,
பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில்
நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக
ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன்
திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி
மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவிட் 19 வைரஸ் பரவலை
தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்
ஆடிக்கொடை திருவிழா 28.07.2020 கொடைக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி
திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.
நாளை (28.07.2020) காலை கொடைக்கால் நடும் நிகழ்ச்சியும், இரவு
முளைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும்,
திருவிழா நிகழ்வுகள் 03.08.2020 அன்று தீபாராதனை, 04.08.2020 அன்று
திருக்கோவில் வளாகத்திற்குள் கும்பம் (கரகம்) புறப்படுதல், அன்று இரவு தீச்சட்டி
புறப்படுதல், 05.08.2020 அன்று முளைப்பாளிகை திருக்கோவிலில் வலம் வருதல்
உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

advertisement by google

✍இந்நிகழ்ச்சிகளை மாவட்ட
நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ
டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில்
உள்ளதால் இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி
இல்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும்,
கொரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு
அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்
நந்தூரி தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button