இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

லட்சக்கணக்கான பாடல்களால் நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிய எஸ்.பி.பி மீண்டு வரவேண்டும்?கனிமொழி எம்.பி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

லட்சக்கணக்கான பாடல்களால் நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிய எஸ்.பி.பி மீண்டு வரவேண்டும்

advertisement by google

கனிமொழி எம்.பி

advertisement by google

எந்தக் குரலைக் கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் பாடவேண்டும்.” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

advertisement by google

தமிழ் திரையிசையின் முதுபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

advertisement by google

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அச்சப்படும் நிலை இல்லை என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நம்பிக்கை தெரிவித்தார்.

advertisement by google

இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களும் அவர் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

advertisement by google

இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலம் பெற்று வந்து ரசிகர்களுக்காக மீண்டும் பாடவேண்டும் என தி.மு.க எம்.பி., கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளார்.

advertisement by google

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இலட்சக்கணக்கான பாடல்களின் வழியாக நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட எஸ்.பி.பி அவர்கள் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. .

எந்தக் குரலை கேட்காது ஒருநாளைக்கூட தாண்டிப்போவது சாத்தியமில்லையோ, எந்தக் குரல் மக்களின் மகிழ்ச்சியையும் வலிகளையும் அன்றாடம் பகிர்ந்துகொண்டதோ, எந்தக் குரல் தன் பாடலின் வழி ஒரு நிகழ்கலையையே நடத்திடுமோ, அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உடல்நலம் பெற்று மறுபடியும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக பாடவேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button