இந்தியா

மத்தியபிரதேசம் போபாலில் சிறுமியை தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றிய அரசு மருத்துவ பணியாளர்கள்✍️விண்மீன் நியூஸ்✍️முழுவிவரம்

advertisement by google

சிறுமியை தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றிய மருத்துவ பணியாளர்கள்✍️போபால்-மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமிக்கு, அரசு மருத்துவமனையில் தரையில் உட்கார வைத்து ரத்தம் ஏற்றிய செயலுக்கு, சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

advertisement by google

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, சத்னா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி சந்தோஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியின் தாய் அவளை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.பரிசோதனை செய்த டாக்டர், ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்’ அளவு குறைவாக இருப்பதால் ரத்தம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

advertisement by google

அங்குள்ள வார்டுக்கு சென்ற போது, படுக்கை எதுவும் காலியாக இல்லை. இதையடுத்து, மருத்துவ உதவியாளர்கள், சிறுமியை அங்குள்ள வராண்டாவின் ஓரத்தில் உட்கார வைத்து ரத்தம் செலுத்தினர். ரத்தம் இருந்த பையை சிறுமியின் தாயிடம் கொடுத்து உயர்த்தி பிடிக்கச் செய்தனர். அந்த தாயும் கைவலிக்க ரத்தப் பையை உயர்த்திப் பிடித்தபடி வெகு நேரம் நின்று கொண்டிருந்தார். இதை சிலர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

advertisement by google

இதையடுத்து, சத்னா மாவட்ட கலெக்டர் அனுராக் வர்மா உத்தரவுப்படி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக், மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் நிகம், நர்ஸ் அஞ்சு சிங் ஆகியோருக்கு சம்பள உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button