இந்தியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கும், நியமிக்கப்பட்டஆளுனருக்கும்,எந்த ஒரு உரிமையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

advertisement by google

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ) என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரை, பின்னர் கேரளத்தில் தொடர்ந்தது.

advertisement by google

இன்று(செப்டம்பர் 30) காலை மலப்புரத்திலிருந்து கிளம்பிய ராகுல், கூடலூர் வந்தடைந்தார். மாலை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

advertisement by google

கூடலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: “ ஏன் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் ஆளுநர்கள் குறுக்கிட வேண்டும்? அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைக் கவிழ்ப்பதற்கு பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன உரிமை இருக்கிறது. பாஜக நாடு முழுவது ஒரே மொழி மற்றும் ஒரே கலாசாரம் என்பதை வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அதே வேளையில், நாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதிப்பளிக்கிறோம்.

advertisement by google

இதையும் படிக்க:ஐபிஎல்லில் விளையாடுவதைத் தடுக்கக் கூடாது: யாரைப் பற்றி கூறுகிறார் ஹேடன்?

advertisement by google

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென தனி மொழி, கலாசாரம் உள்ளது. அவை மதிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சியில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வும், கோபமும் அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு,குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

advertisement by google

தொடர்ந்து, நாளை காலை கூடலூரிலிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button