கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

டெங்குவை தடுக்க திருச்சி எலைட்பள்ளிமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

advertisement by google

டெங்கு தடுக்க, தவிர்க்க
சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும்
நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா

advertisement by google

திருச்சி எலைட் சிறப்பு பள்ளியில் டெங்கு தடுக்க தவிர்க்க விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் டயர் ,தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்டவற்றில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன. இதனால் உடலில் தட்டணுக்கள் குறைந்து விடும். ஆகையினால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு கசாயம் அருந்தவேண்டும்.
நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும்.
நிலவேம்பு குடிநீர் அல்லது கசாயம் பருகுவதால்
உடலில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்கள் நீங்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி நிலவேம்பு கசாயத்தை பருகி வருவதால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதோடு ஏற்கனவே டெங்கு ஜுரம் பாதித்திருந்தாலும் அதிலிருந்து விரைவாக குணம் பெறலாம் என்றார். இயற்கை நல வாழ்வியல் ஆலோசகரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button