தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில்பைக் திருடிய இருவர் கைது – 6 பைக் பறிமுதல்?தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் அதிரடி?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

பைக் திருடிய இருவர் கைது – 6 பைக் பறிமுதல்

advertisement by google

✍தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

✍தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலணியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது இரு சக்கர வாகனம் நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்மதுகரன் என்பவரது இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டுவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலணி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும் கடந்த 31.07.2020 முதல் 19.09.2020 வரை 6 பேர்களது இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

advertisement by google

✍இருசக்கர வாகன திருட்டு ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோகிலா, உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், பென்சன் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெனிவர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

advertisement by google

✍அதன்பேரில் தனிப்படையினர் தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் வாகனம் திருடுபோன நேரங்களை கணக்கிட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் இன்று (05.10.2020) காலை 11.00 மணிக்கு மீண்டும் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே ஹார்பர் ரோட்டில் வாகன தணிக்கை செய்தபோது, இரு சக்கர வாகனங்களை திருடும் எண்ணத்துடன் வந்த திருநெல்வேலி தச்சநல்லூரைச சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (வயது24) மற்றும் தச்சநல்லூர் மேலக்கரை நியூகாலணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சக்தி கணேஷ் (வயது24) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களில் தெர்மல்நகர் காவல்நிலைய சரக பகுதிகளில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 6 இரு சக்கர வாகனங்கiயும் பறிமுதல் செய்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button