பயனுள்ள தகவல்மருத்துவம்

எப்படிப்பட்ட தீராத மன அழுத்தமும் உடனே தீர்வதற்கு சுலபமான, சூப்பரான 8 வழிகள் இதோ உங்களுக்காக✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? எப்படிப்பட்ட தீராத மன அழுத்தமும் உடனே தீர்வதற்கு சுலபமான, சூப்பரான 8 வழிகள் இதோ உங்களுக்காக

advertisement by google

மன அழுத்தம் என்பது இயல்பான ஒரு விஷயம் தான். சாதாரணமாக உடல் அளவிலும், மனதளவிலும் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தம் தான் நமக்கு தன்னம்பிக்கையை மற்றும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்கக் கூடிய தைரியத்தை கொடுக்கிறது. ஆனால் இது அதிகமாகும் பொழுது மன உளைச்சலாக மாறி விடுகிறது. அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. சாதாரணமான ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் அது பிரச்சனையாக தோற்றமளிக்கிறது. அவ்வளவு தானே தவிர மன உளைச்சல் என்பது ஏதோ கொடிய நோய் ஒன்றும் அல்ல என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

advertisement by google

இதனை புரிந்து கொண்ட பின்னர், அதனை எப்படி விரட்டி அடிப்பது? என்பதை தீர்க்கமாக யோசிக்க வேண்டும். அதற்காக சுலபமான 8 வழிகள் உங்களுக்காக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை படியுங்கள். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

advertisement by google

பணிச்சுமை அதிகரித்தாலும், நாம் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்தாலும், நாம் எதிர்பார்த்தவை நடக்கா விட்டாலும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு முதலில் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மன அழுத்தம் நோயாக இல்லாவிட்டாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

advertisement by google

வழி 1: மன அழுத்தம் குறைய லாஃபிங் தெரபி எனப்படும் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் பாலிசியை கடைபிடிப்பது சிறந்த பலனை தரும். வாயைத் திறந்து சத்தமாக சிரிக்க வேண்டும். இப்படி சிரிக்கும் பொழுது நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கப் பெறும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி மன அழுத்தம் குறைந்து விடுகிறது.

advertisement by google

வழி 2: மன அழுத்தம் சீராக இருக்க வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகவும் நல்லது. செல்லப் பிராணிகள் உடன் விளையாடும் பொழுது ஒருவிதமான ஹார்மோன்கள் நமது உடலில் வெளியாகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி விடுவதாக கூறப்படுகிறது. எனவே செல்லப் பிராணிகளுடன் நேரத்தை அதிகமாக செலவிடுங்கள்.

advertisement by google

வழி 3: மன அழுத்தத்துடன் நீங்கள் உணரும் பொழுது வீட்டில் இருக்கும் பொருட்களை துடைத்து சுத்தம் செய்து அதற்குரிய இடங்களில் சரியாக சீர்படுத்துவது மூலம் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முடியும். வீட்டிற்கு அழகு சேர்க்கும் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி வைக்கலாம்.

advertisement by google

வழி 4: வீட்டில் நீங்கள் வேலை செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்தமான இசைகளை கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவது உடன், மன அழுத்தமும் குறைகிறது. இசைகள் மன அழுத்தம் குறைவதற்கு பெருமளவு உதவுவதாகக் கூறப்படுகிறது. அதற்காக சோகப் பாடல்களை கேட்காதீர்கள்.

வழி 5: தினமும் ஏதாவது ஒரு சிட்ரஸ் நிறைந்த பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறை பருகுவதன் மூலம் உடலின் ஆற்றல்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தமும் குறையுமாம். அப்போ டெய்லி ஒரு ஜூஸ் தான் இனிமே!

வழி 6: வீட்டில் தனிமையை உணரும் பொழுது உங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்க விட்டு நடனம் ஆடுவதும் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். பாடிக் கொண்டே நடனமாடுவது மனதிற்கு உற்சாகத்தையும், மனதை லேசாகவும் மாற்றக்கூடும்.

வழி 7: அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து தியானம் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மூச்சை ஆழ்ந்து சுவாசித்து வெளிவிடும் பொழுது ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலந்து ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள்.

வழி 8: மாதக்கணக்கில் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கு உங்களுக்கு பிடித்தமான புதிய விஷயங்களை, தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை காட்டுங்கள். புதியதாக தெரியாத விஷயத்தை செய்யும் பொழுது உங்களுடைய கவனம் முழுவதும் திசை திரும்பி விடுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து எளிதாக விடுபட முடியும். எந்த ஒரு விஷயத்தையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் என்கிற ஒரு விஷயமே நமக்கு ஏற்படாது. என்ன நடந்தால் என்ன? நம் பக்கம் நியாயம் இருக்கிறது, என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, மற்றவர்கள் கையில் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். அது நம் கையிலேயே உள்ளது

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button