இந்தியா

முறுக்கு மீசையுடன் ஊர்சுற்றும் கேரளபெண்- கேலி செய்தாலும் கவலையில்லை என பதில்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கேரளாவில் முறுக்கு மீசையுடன் சுற்றும் பெண்- கேலி செய்தாலும் கவலையில்லை என பதில்*

advertisement by google

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. (வயது 35).ஷைஜூவின் முகத்தில் ஆண்களை போல முறுக்கு மீசை உள்ளது. இந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் தனது டி.பி.யாக வைத்துள்ளார்.ஆண்கள் மட்டுமே மீசையுடன் இருப்பதை பார்த்து வந்த மக்களுக்கு பெண் ஒருவர் மீசையுடன் காட்சி அளிப்பது வியப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்ல ஷைஜூவை கேலியும் செய்தனர்.இதுபற்றி ஷைஜூவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-எனது முகத்தில் லேசான பூனை முடி காணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உதட்டின் மேல் பகுதியில் காணப்பட்ட முடி அடர்த்தியாக இருந்தது.ஆண்களின் மீசை போல வளர்ந்து இருப்பதை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது. எனவே நான் அந்த முடியை அகற்றவில்லை. இதற்காக என்னை பலர் கேலி செய்தனர். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.மீசை இருப்பதால் எனக்கு அசவுகரியம் எதுவும் இல்லை. அதனை வளர்க்க தொடங்கிய பின்னர் மீசை இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. கொரோனா காலத்தில் மாஸ்க் அணிவதற்கு கூட எனக்கு வெறுப்பாக இருந்தது. மாஸ்க் அணிந்தால் எனது மீசை வெளியே தெரியாது என்பதால் நான் மிகவும் கவலைப்பட்டேன்.இந்த மீசை எனது மகளுக்கும் பிடித்து இருக்கிறது. பின்னர் நான் எதற்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு வருத்தப்பட வேண்டும். யார் என்ன சொன்னாலும் நான் எனது மீசையை அகற்ற போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button