இந்தியா

பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில், ஓடுதளத்தில் நாய் ஓட்டம், விஸ்தாரா விமானம் தரையிறங்காமல் சென்ற பரிதாபம்

advertisement by google

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தில் தெரு நாய் ஓடியது.

advertisement by google

இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய விஸ்தாரா விமானம் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பியது.

advertisement by google

சென்ற திங்கட்கிழமை அன்று பிற்பகல் 12.55 மணிக்கு விஸ்தாரா விமானம் பெங்களூருவிலிருந்து கோவாவில் உள்ள தபோலிம் அனைத்துலக விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.

advertisement by google

கோவாவில் உள்ள இந்த விமான நிலையம், கடற்படையின் ஐஎன்எஸ் ஹன்சா தளத்தின் ஒரு பகுதியாகும்.

advertisement by google

தபோலிம் விமான நிலையத்தை விமானம் நெருங்கியபோது ஒரு தெரு நாய் ஓடுபாதையில் நிற்பதைக் கண்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.

advertisement by google

இதையடுத்து விமானியை தொடர்புகொண்ட கட்டுப்பாட்டு அறை, விமானத்தை சற்று நேரம் தரை யிறக்காமல் காத்திருக்கும்படி அறிவுறுத்தியது.

advertisement by google

ஆனால் விமானி பெங்களூருக்குத் திருப்ப விரும்பினார்.

advertisement by google

அதன்படி விமானம் பெங்களுரு நகருக்குத் திருப்பப்பட்டது.

அந்த விமானம் மீண்டும் அன்று மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு கோவா வந்தடைந்தது.

இது குறித்து விளக்கமளித்த விமான நிலைய இயக்குநர் தனம் ஜெய ராவ், “ஓடுபாதையில் தெரு நாய் எப்போதாவது நுழைவது வழக்கம். உடனே அப்புறப்படுத்தி விடுவோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தச் சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது,” என்று கூறினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button