தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சென்னையில்விரத்தியில் தற்கொலை செய்ய முயன்ற ஊனமுற்ற மூதாட்டியை காப்பாற்றிய புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் M. குருசேவ் அவர்களுக்கு காவல்துறை கூடுதல் ஆணையாளர் பாராட்டு!✍️விண்மீன்நியூஸ்✍️

advertisement by google

சென்னையில் விரத்தியில் தற்கொலை செய்ய முயன்ற ஊனமுற்ற மூதாட்டியை காப்பாற்றிய புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு காவல்துறை கூடுதல் ஆணையாளர் பாராட்டு!, பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
சென்னை,
விரக்தியில் தற்கொலை செய்வதற்காக திருவொற்றியூர் கடற்கரையோரம் சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டியை காப்பாற்றி மகனிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் ஆகியோரை காவல்துறை கூடுதல் ஆணையர் லோகநாதன், நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

advertisement by google

கடந்த 26-1-22 ந்தேதி அன்று திருவொற்றியூர் மேட்டு தெருவை சேர்ந்த 70 வயதான ஊனமுற்ற மூதாட்டி மன விரக்தியின் காரணமாக எண்ணூர் எஸ்.என்.செட்டி சோதனைசாவடி அருகே உள்ள கடற்கரைக்கு தற்கொலை செய்யும் எண்ணத்துடன் சக்கர நாற்காலியில் தனியாக வந்தார்.

advertisement by google

அந்த நேரத்தில் போக்குவரத்து வாகன ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் எம். குருசேவ், மற்றும் தலைமை காவலர் ராமகோவிந்தன், ஆகியோர் மூதாட்டியின் செயலை கவனித்து இருவரும் உடனே விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர் . மேலும் , இச்சாலையில் கண்டெய்னர் லாரி மற்றம் கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் ஏன் தனியாக வந்தீர்கள் உதவிக்கு யாரும் வரவில்லையா என கேட்டபோது மூதாட்டி விரக்தியில் பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தார் . எனினும் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசேவ் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவருக்கு ஆறுதல் கூறி விசாரணை செய்தபோதுஅவரது பெயர் ஜானகி அம்மாள் (வ /70) அவரது கணவர் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்று இறந்ததும் , இவர்களுக்கு 6 மகன்கள் உள்ளதும் அவருக்கு நடக்க முடியாததால் சக்கர நாற்காலியில் உள்ள நிலையில் வயதான தன்னை மகன்கள் மற்றும் உறவினர்கள் யாரும் சரிவர கவனிக்காமல் தனியாக உள்ளதால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடற்கரை சாலையில் தனியாக வந்துள்ளதும் தெரியவந்ததை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விபரங்கள் கூறி மூதாட்டியின் மகன் விஸ்வநாதன் என்பவரை வரவழைத்து வயதான உங்கள் தாயை நன்கு கவனித்துக் கொள்ளும்படி அறிவுரைகள் கூறியும் எச்சரித்தும் மூதாட்டியை அவரது மகனுடன் அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த பெருநகர சென்னை காவல்துறை கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஜெ.லோகநாதன், அவர்கள் சிறப்பாக மனித நேயத்துடன் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் குருசேவ், மற்றும் தலைமை காவலர் ராமகோவிந்தன், ஆகியோரை நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button