t

காமநாயக்கன்பட்டி புதுமை புனிதபரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழாவின் கொடியேற்ற விழாவில் முன்னால் செய்திதுறை அமைச்சரும் ,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜீ பங்கேற்று சிறப்பிப்பு

advertisement by google

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தலம் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ வரலாறு கொண்ட இந்த ஆலயத்தில் தான் வீரமா முனிவர் இந்த தலத்தின் 7-வது பங்குதந்தையாகவும், காம நாயக்கன்பட்டி பங்கின் 4-வது பங்குத் தந்தை யாகவும் பணியாற்றினார். வீரமாமுனிவர் வீரமாமுனிவர் தான் தமிழ் கலாச்சாரமான தேர் பவனி, முளைப்பாரி, கும்பிடு சேவை போன்ற நிகழ்வுகளை இந்த ஆலயத்தில் புகுத்தி வழிபாடு நடந்தியவர். 1713-ம் ஆண்டு முதல் 1715-ம் ஆண்டு வரை இங்கு பங்குத் தந்தையாக இருந்தார். இங்கு நடக்கும் கொடியேற்றம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த ஆலயத்தின் 338-வது திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, பாளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பல்லா யிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர். நேற்று காலை 8 மணி, 10 மணி, 12 மணி, மாலை 4 மணி என திருப்பலி நடந்தது. மாலை 7 மணிக்கு கொடியேற்றம் தொடங்கியது. கொடி கம்பத்தில் பக்தர்களின் மாலைகளை கட்டி தொங்கவிட்டனர். ஆலயக் கொடியேற்றம் வாண வேடிக்கை யுடனும், பக்தர்களின் ஆரவாரத்துடனும் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ், வாரணாசி ஆயர் நியூட்டன் ஆகியோர் முன்னிலையில் கொடி மரத்தில் முதலாவதாக ஆலயக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் அன்னை மரியாள் சப்பர பவனி நடந்தது. அதுபோல் சிறப்பு திருப்பலியும் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.திருத்தேர் பவனி10-நாள் திருதிவிழா வையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி நடக்கிறது. 13-ந்தேதி புதுநன்மை விழாவும், 14-ந் தேதி ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. 15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு நேரடி திருப்பலியுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான அன்னை மரியாள் திருத்தேர் பவனி நடக்கிறது. அதுபோல் வீரமாமுனிவர் கால தேர் புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர் முன் இருந்து, நற்கருணை பவனி தொடங்கிறது. அன்னதானம் கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் 300-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பங்குத்தந்தை அந்தோணி குருஸ், உதவி பங்குத் தந்தை செல்வின், மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button