இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

ரேஷன் அரிசி தயாராகும் விதம்??விழிப்புணர்வு பதிவு ?

advertisement by google

ரேஷன் அரிசி தயாராகும் விதம்???

advertisement by google

விழிப்புணர்வு பதிவு..

advertisement by google

இதுவரை புரியாத புதிராக இருந்து வந்ததை, இன்வெஸ்ட்டிகேட் ஜர்னல் என்று சொல்லி பொய்யை உண்மை போல சொல்லி வரும் தமிழகத்தின் புகழ் பெற்ற வார இதழ்களில் கூட இந்த உண்மைச் செய்தி வெளி வந்ததில்லை.

advertisement by google

இரண்டு அரிசி வகைகளிலுமே ஒரே மாதிரியான துர்வாடைத் தானே வர வேண்டும்?

advertisement by google

ஆனால், அப்படி வருவதில்லையே!

advertisement by google

பொதுவாக வீடுகளில், புழுங்கல் அரிசிக்கான நெல்லை சுத்தமான முறையில், ஒருநாள் மட்டுமே ஊற வைத்து, பின் அவித்து நன்றாகக் காய வைப்பார்கள். ஆனால்,ரேசன் அரிசிக்கான நெல்லை குறைந்தது ஐந்து நாட்கள் முதல் ஒரு வாரம், பத்து நாட்கள் எனச் சுத்தம் செய்யப்படாத தொட்டிகளில் கொட்டி ஊற வைத்து, பின் அவித்துக் காய வைப்பார்கள்….

advertisement by google

வீட்டில் ஊற வைத்து அவிக்கும் போது, அதற்கே உரிய மனம் வரும். ஆனால், இங்கு அவிக்கும் போதே துர்நாற்றம் தான் வரும். மில் களங்களில் காயப் போட்டிருக்கும் போது, அந்த ஏரியா முழுவதுமே துர்நாற்றம் வீசும். ஆனால், அங்கு வசிப்பவர்கள் அதற்குப் பழகி இருப்பார்கள். புதிதாகச் செல்வோர் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடையைக் கட்டுவார்கள். இதனை நானும் செய்திருக்கிறேன்.

advertisement by google

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னு தான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்குத் தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்குக் கூறப் போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில் தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாகக் குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்து கொள்கிறது.

குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லைச் சாக்கில் பிடித்துக் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக் கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டு வந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய் விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும் போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேக வைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்குக் கொடுத்து விட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படித் தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊற வைத்த அரிசி மாதிரி ஈரமாகத் தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டிப் போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டிப் பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போது தான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும்.

அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும் போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும் போது “கடுக்” என்று சத்தம் வர வேண்டும். அப்போது தான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆற வைத்து பிறகு தான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊற வைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டிப் போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை….

குறிப்பு..

உழவர்களாகிய நாங்கள் நல்ல அரிசி, ரேஷன் அரிசி என்று கருதி ஒருநாளும் விதைப்பதில்லை….

உழவர்களாகிய எங்களிடம் இருந்து அறுவடைக்குப் பின் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் ஒரே மாதிரியாக இருப்பின் அதெப்படி மால்களில் விற்க்கப்படும் உயர்தர அரிசியாகவும், தரம் தாழ்ந்த வாடையுடன் கூடிய ரேஷன் அரிசியாகவும் வணிகப்படுத்தப் படுகிறது….

சிந்திப்பீர் உழவர்களே..!!!

இடையில் நடக்கும் சதிகளுக்கு உழவர்கள் ஒரநாளும் பொறுப்பேர்க்களாகாது…!!!!

ஆனால் மக்கள் வஞ்சிப்பதும்/தூற்றுவதும் உழவர்களாகிய எங்களையே???

advertisement by google

Related Articles

Back to top button