குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்-பாஜக செயல் தலைவர்?
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் – பாஜக செயல் தலைவர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில், தலித் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான பிரசாரம் மேற்கொள்வதன்மூலம், சிறுபான்மையினரை காங்கிரஸ் தலைமை தவறாக வழிநடத்துவதாகக் கூறினார்.
இந்த சட்டத் திருத்தம் மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதைப் பற்றியது என்றும், குடியுரிமையை பறிப்பது அல்ல என்று கூறினார்.
இதன்மூலம் பயனடைவோர் 70 முதல் 80 சதவீத தலித்துகள் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி மற்றும் அதிருப்தி அரசியலை நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.