இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பெட்ரோல்,டீசல்,மீதான கலால் வரியை மத்தியரசு திரும்ப பெற வேண்டும்?காயல்அப்பாஸ் வலியுறுத்தல்?

advertisement by google

பெட்ரோல்,டீசல்,மீதான கலால் வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

advertisement by google

ஜனநாயக மக்கள் மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

advertisement by google

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 22.98 ஆகவும் டீசலுக்கு ரூ 18.83 ஆகவும் உயர்த்துள்ளது இந்த உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2014 மோடி அரசு பதவி யேற்ற போது பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ 9.48 இருந்தது டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ 3.56 என்ற அளவில் இருந்தது பா ஜ க ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய கலால் வரி 12 முறைக்கு மேல் உயர்த்தபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

advertisement by google

பா ஜ க அரசு கலால் வரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பெரும் அளவில் வரி விதிப்பதனால் நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள் என்பதை மத்திய பா ஜ க அரசு கருத்தில் கொண்டு கலால் வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

advertisement by google

கடந்த 6 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை 50 சதவிததிற்கு மேலாக குறைந்த போதிலும் இந்த அளவிற்கு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வுனால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

advertisement by google

எனவே : பெட்ரோல், மற்றும் டீசல், ஆகியவற்றை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர வேண்டும் மெனவும் .கலால் வரியை திரும்ப பெற வேண்டும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button