கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொதுமக்கள்✍️கொடுமையிலும் கொடுமை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு; ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொதுமக்கள்*
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, நகர்நல மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, ஊருணி தெரு, ஸ்ரீராம் நகரில் செயல்பட்டு வரும் நகர்நல மையங்களில் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தடுப்பூசி இல்லை என்பது தெரியமால் பொதுமக்கள் பலர் வந்து நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
தடுப்பூசி இல்லையென்றால் எப்போது வரும் என ஆஸ்பத்திரி மற்றும் மையங்களில் எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
முறையாக அறிவிக்க வேண்டும்
தடுப்பூசி போட வந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், “அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வருபவர்கள் தேவையில்லமால் அலைந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், எனவே தடுப்பூசி குறித்து ஆஸ்பத்திரி முறையாக அறிவிப்பு செய்ய வேண்டும்” என்றார்
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) இருந்த தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் தடுப்பூசி வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.