இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ரஜினி என்னும் மந்திரம்? விருதுக்கு தான் இவரால் பெருமை

advertisement by google

ரஜினி என்னும் மந்திரம்

வாழ்நாள் #சாதனையாளர்

சிகப்பாய் இருப்பவர்களே திரையுலகில் கதாநாயகனாக வலம்வர முடியும் என்ற மாயயை தன் ஸ்டைலால் மாற்றி இன்றளவும் சூப்பர் ஸ்டாராக ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சி கொண்டிருப்பவர் ரஜினி

advertisement by google

ஏறக்குறைய தான் நடித்த படங்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதி படங்களுக்கு மேல் வெள்ளிவிழா படங்களையும் நூறுநாள் படங்களையும் கொடுத்து தன்னை நம்பி வந்த ரசிகர்களையும் தன்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களையும் ஒன்மேன் ஷோவாக திருப்தியும் லாபாமும் அடையவைத்தவர் ரஜினி

advertisement by google

இந்திய நடிகர்களிலேயே ஆகசிறந்த நடிகனாக தன்னை நிலைநிறுத்திய செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் சொந்த திரைப்பட கம்பெனியான சாந்தி புரொடக்ஷன் நலிந்த நிலையில் சந்திரமுகி என்ற தனது சூப்பர் ஹிட் படத்தின் மூலம் 200கோடி ரூபாய் லாபத்தை ஈட்ட செய்து அந்ந கம்பெனியை தூக்கிவிட்டவர்..
அந்த படம் இந்திய திரையுலகிலே சாதனை படைத்த ஹரிதாஸ்க்கு அடுத்து 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது..

advertisement by google

கருப்பு வெள்ளை தொடங்கி ஈஸ்ட்மெண்ட் கலர் கோவாகலர் சினிமாஸ்கோப் டிஜிட்டல் அனிமேஷன் 3D வரை சினிமாவின் பல்வேறு பரிமாண வளர்சியிலும் ஹீரோவாகவே நடித்துகொண்டிருக்கும் உலகின் முதலும் கடைசியுமான கதாநாயகன் ரஜினி

advertisement by google

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே 69 ஆகியும் ஹீரோவாக தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒரே மாஸ் ஹீரோ ரஜினி

advertisement by google

தன்னால் நட்டம் அடைந்த தயாரிப்பாளைரை அழைத்து நட்டத்தொகையை தன் சொந்த உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொடுத்த..நடிகனையும் மீறிய நல்ல உள்ளம் கொண்ட மாமனிதன் ரஜினி..

advertisement by google

இன்று ஒரு படம் வெளியாகிறதென்றால் சுமார் 600/700 பிரிண்டுகள் போடுவது சாதாரணமாகிவிட்டது.. ஆனால் முதல் முறையாக 100 பிரிண்ட் போட்டு தமிழக முழுவதும் சக்கைபோடு போட்டது தளபதி திரைப்படம் என்பது நாடறிந்த உண்மை..

advertisement by google

ஹாலிவுட் கனவு இன்றும் கனவுகண்டு இருப்பவர்கள் மத்தியில் 1980 வாக்கிலேயே ப்ளட்ஸ்டோன் என்னும் ஆங்கில திரைப்படத்தில் கார் ஓட்டுனராக தனது ஸ்டைலில் இம்மியளவும் மாற்றாமல் நடித்து பட்டைய கிளப்பியவர் ரஜினி

நல்ல நடிப்பு…
புவனா ஒரு கேள்விக்குறி
ஆறிலிருந்து அறுபது வரை
நல்லவனுக்கு நல்லவன் தர்மதுரை.. அண்ணாமலை விடுங்க அத அடுக்கிகிட்டே போகலாம்.. பெண்பிள்ளையின் தவறான நடத்தையை கண்டு தவிப்பான உணர்வினை நாங்கள் நல்லவனுக்கு நல்வனிலே பார்த்துவிட்டோம்…

இதுபோல எண்ணற்ற காரண காரியங்களால்தான் அவருக்கு இன்று
வாழ்நாள் சாதனையாளர் விருது…

ஒரு பிலீம் இன்ஸ்ட்டியூட் மாணவனாக பயிற்ச்சி எடுத்து உலகளாவிய சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டுருக்கிறார்

தமிழ்மொழியை உலகளவில் கொண்டு சென்ற பெருமையும் ரஜினிக்கு உண்டு..முகநூலில் சீனர்களும் ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் அவரின் வசனத்தை பாடல்களை தமிழிலேயே சொல்வதை நாம் நிச்சயம் பார்த்திருப்போம்..

ஆக..விருதுக்குதான் இவரால் பெருமை ?
.. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣

advertisement by google

Related Articles

Back to top button