பயனுள்ள தகவல்மருத்துவம்

சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சிவப்பு அரிசி

advertisement by google

சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

advertisement by google

1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளைக் கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?

advertisement by google

இரண்டு வருட ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் “மதுரை”. மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?

advertisement by google

அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகை தான் காரணம். அதையே உட்கொண்டது தான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

advertisement by google

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

advertisement by google

“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை”
என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியைப் பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.

advertisement by google

கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்குப் போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்துக் கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?
உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற வெளிநாட்டுக் கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தைத் தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்குச் சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனையில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்தப் பரம்பரையில் மாறி விட்டது நம் அவலநிலை.

சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80 ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கமிஷன் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40 வருடங்கள் என 40×3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் எனத் தானாகவே”வடக்கிருந்து” (தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர் விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழி நடத்திய வாழ வைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!
புராதான உணவுகளை உண்போம்!
வாழ்வதற்காக உண்!
உண்பதற்காக வாழாதே!
உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட நம் பாரம்பரியத்தை முதலில் அறியச் செய்யுங்கள்.

சரித்திரங்களை விதையுங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். “மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! ” அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கை முறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 வருடங்கள் மீண்டும் ஆரோக்கியத்துடன் வாழ்வான்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button