t

லிப்ஸ்டிக் பவித்ரா சாமியார்.. போலீஸை பார்த்ததுமே எகிறி தப்பி கட்டிடத்துக்குள் பதுங்கி ஒடிய சாமியார்.. அதிரடி கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

லிப்ஸ்டிக் பவித்ரா.. போலீஸை பார்த்ததுமே எகிறி தப்பி கட்டிடத்துக்குள் பதுங்கிய சாமியார்.. அதிரடி கைது

advertisement by google

சென்னை: நிலமோசடி காரணமாக பெண் சாமியார் மீது புகார் தரப்பட்டிருந்த நிலையில், அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

advertisement by google

திண்டுக்கல் சாமியார் பவித்ரா.. தஞ்சை பகுதியில் படுபேமஸ் ஆன பெண் சாமியார் இவர்.. கழுத்து நிறைய நகைகள் தொங்கும்.. ஆளுயுர மாலை அணிந்து கொள்வார்.. இப்படியேதான் ஊருக்குள் நடமாடுவார்..

advertisement by google

சில மாதங்களுக்கு முன்பு, இவர் தஞ்சை கமிஷனர் ஆபீசுக்கு வந்திருந்தார்.. சில்வர் கலரில் சுடிதார் அணிந்து கொண்டு, கழுத்தில் சிவலிங்கத்தை கற்களால் பதித்த டாலர் செயின், காசு மாலைகளுடன் கமிஷனர் ஆபீசில் நுழைந்த பவித்ராவை பார்த்ததும் அங்கிருந்தோர் சற்று மிரண்டுவிட்டனர்..

advertisement by google

எப்போதுமே உதட்டில் லிப்ஸ்ட்டிக், தலைக்கு பிரவுன் கலரில் ஹேர்கலரிங்கில் வித்தியாசமாக காணப்படுவார்.. வழக்கமாக பெண் சாமியார்கள் என்றால், காவி நிறம் அல்லது சிவப்பு, மஞ்சள் நிற சேலைகளில் எளிமையாக ஆசி தருவது வழக்கம்.. ஆனால், ஸ்ரீபவித்ராவின் மார்டன் டிரஸ்ஸூம், ஹை ஹீல்சும் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும்..

advertisement by google

இந்நிலையில், இவர் மீதும் புகார் ஒன்று கிளம்பி உள்ளது.. நிலக்கோட்டை பக்கத்தில் வீலிநாயக்கன்பட்டியில் சேர்ந்தவர் தவயோகி ஞானதேவபாரதி… இவர் அந்த பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் கடந்த வருடம் ஒரு திருட்டு நடந்துவிட்டது.. அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக பவித்ரா வந்துள்ளார்.. வந்தவர் அங்கேயே சில நாட்கள் தங்கி விட்டார்.. ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றியுள்ளார்.

advertisement by google

அதுமட்டுமல்ல, சித்தரேவு பகுதியில் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தில் முதியோர் இல்லம் தொடங்கலாம் என்று பவித்ரா சொல்லவும், ஆசிரமத்தை சேர்ந்த ஞானதேவ பாரதியும் ஒப்புக் கொண்டார்.. இதற்காக பவித்ராவிடம் ரூ.11 லட்சம் பணம் தந்துள்ளார்.. இதற்கு பிறகு கும்பகோணத்திலும் ஒரு ஆசிரமம் தொடங்கலாம் என்று யோசனை கூறியுள்ளார்.

advertisement by google

இப்படிப்பட்ட சூழலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த ஆசிரமத்திற்கு மறுபடியும் வந்தார் பவித்ரா.. ஆனால், ஞானதேவபாரதி ஆசிரமத்தில் அப்போது இல்லை.. எனினும், அங்கிருந்த சுந்தரேசன் என்பவர் உதவியுடன் 35 பவுன் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்து சென்றதாக புகார் எழுந்தது… இதுகுறித்து ஞானதேவபாரதி பவித்ராவிடம் கேட்டுள்ளார்.. இருவருக்கும் வாக்குவாதமும் நடந்துள்ளது.. இறுதியில் அந்த ஆசிரமத்தில் புலி, மான் தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு பவித்ரா புகார் தந்துவிட்டார். உடனே ஞானதேவபாரதி தலைமறைவானார்…

இதனை பயன்படுத்தி கொண்ட பவித்ரா, அந்த ஆசிரமத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றார்.. ஆசிரமத்தை பூட்டி வைத்து கொண்டார்.. இதையடுத்து, பவித்ரா மீது நிலக்கோட்டை போலீஸில் ஞானதேவபாரதி மற்றும் அருள்மணி ஆகியோர் 2 புகார்கள் அளித்தனர்… ஆசிரமம் தொடங்குவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், தாங்கள் இல்லாத நேரத்தில் ஆசிரமத்திற்குள் புகுந்து அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்கள் மற்றும் நகையை திருடிச் சென்றதாக புகார் தரப்பட்டது.. இப்போது பவித்ரா தலைமறைவாகிவிட்டார்..

பவித்ராவையும் அவரது தங்கை ரூபாவதியையும் போலீசார் தேடி வந்தனர்… சகோதரிகளும் எங்கெங்கோ தலைமறைவாக இருந்து வந்தனர்.. இறுதியில் திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவிற்கு சகோதரிகள் வந்திருப்பதாக தகவல் கிடைக்கவும், அவர்களை கைது செய்ய போலீசார் சென்றனர்.. போலீசாரை பார்த்ததுமே சாமியாடிவிட்டார் பவித்ரா.. “நான் காளியின் அவதாரம்…. என்னைக் கைது செய்தால் பஸ்பம் ஆகிவிடுவீர்கள்” என்று மிரட்டினார்..

ஆனாலும் போலீசார் அவரை சுற்றி வளைக்க முயன்றபோது, பக்கத்தில் கட்டுமான பணி நடந்து வரும் ஒரு கட்டிடத்தில் ஒளிந்துகொண்டார்.. கிட்ட வந்தால் அவ்வளவுதான் என்று போலீசாரை பார்த்து எச்சரித்து கொண்டே இருந்தார்.. இதனால் செய்வதறியாது விழித்த போலீசார், உடனடியாக பெண் போலீசாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.. அவர்களை அந்தகட்டிடத்துக்குள்ளே அனுப்பி பதுங்கி கொண்டிருந்த பவித்ரா மற்றும் ரூபாவதியை கைது செய்தனர்… இப்போது 2 சாமியார்களும் நிலக்கோட்டை ஜெயிலில் உள்ளனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button